புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

4 அக்., 2012


காதல் தகராறில் கால்பந்து வீரர் எரித்து கொலை - காதலியின் உறவினர்கள் வெறிச்செயல் 
கேரள மாநிலம் திருச்சூரை அடுத்த சாருமூட்டைச் சேர்ந்தவர் மோகனன். இவரது மகன் ஜித்து மோகன் (வயது 21). ஆலப்புழாவில் உள்ள ஒரு கல்லூரியில் ஜித்துமோகன் படித்து வந்தார். கால்பந்து வீரரான இவர் சமீபத்தில் மிசோராம் மாநிலத்தில் நடந்த தேசிய ஜூனியர் கால்பந்தாட்ட போட்டியில் கேரள அணியின் துணை கேப்டனாக பங்கேற்றார். இவர் சுனக்கரை பகுதியைச் சேர்ந்த ஒரு பெண்ணை காதலித்தார். இருவரும் வெவ்வேறு மதங்களை சேர்ந்தவர்கள் என்பதால் இவர்களின் காதலுக்கு எதிர்ப்பு ஏற்பட்டது.

இதனால் அந்த பெண்ணின் பெற்றோர் அவரை கொடுங்கலூர் பகுதியில் உள்ள உறவினர் வீட்டில் தங்க வைத்தனர். அங்கிருந்து அந்தப் பெண் ஜித்துமோகனை தொடர்பு கொண்டு பேசினார். இதனால் வெளியூரில் இருந்தாலும் இருவரின் காதலும் தொடர்ந்தது.

இது உறவினர்களுக்கு தெரிய வந்ததும் ஆத்திரத்தை ஏற்படுத்தியது. அவர்கள் பெண்ணின் நெருங் கிய உறவினரான போலீஸ்காரர் ஒருவரிடம் இப்பிரச்சினையை பேசி தீர்க்கும்படி கூறினர்.
அதன்படி போலீஸ்கார உறவினர் கடந்த 2 நாட்களுக்கு முன்பு ஜித்துமோகனை தன் வீட்டிற்கு வரும்படி அழைத்தார். ஜித்துமோகன் அங்கு சென்றதும் போலீஸ்காரர் அவரிடம் தனது உறவுப் பெண்ணுடன் இருக்கும் காதலை கைவிடும்படி எச்சரித்தார்.

இதை ஜித்துமோகன் ஏற்றுக் கொள்ளவில்லை. மாறாக அவரை உறுதியாக திருமணம் செய்வேன் என்று கூறினார். இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.


ஆத்திரமடைந்த போலீஸ்காரர் மற்றும் அங்கிருந்த பெண்ணின் உறவினர்கள் ஜித்துமோகன் மீது பெட்ரோலை ஊற்றி தீ வைத்தனர். இதில் உடல் முழுவதும் தீப்பிடித்து அலறியபடி ஜித்துமோகன் வீட்டை விட்டு வெளியே ஓடி வந்தார்.

அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு கொடுங்கலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். பின்னர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக எர்ணாகுளம் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி ஜித்துமோகன் நேற்று பரிதாபமாக உயிர் இழந்தார்.
ஜித்துமோகன் இறந்த தகவல் அறிந்ததும் அவரது பெற்றோர் மற்றும் உறவினர்கள் அதிர்ச்சி அடைந்தனர். அவர் சார்ந்த மதத்தினரும் ஆஸ்பத்திரியில் குவிந்தனர். இதனால் அங்கு பரபரப்பும் பதட்டமும் ஏற்பட்டது.
ஜித்துமோகனை எரித்துக் கொன்றவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர்கள் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் இந்த சம்பவத்தை கண்டித்து இன்று மாவேலி கரை பகுதியில் முழு அடைப்பு போராட்டமும் நடத்துகிறார்கள்.

ad

ad