புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

30 அக்., 2012


புதுவை தி.மு.க. செயற்குழு கூட்டத்தில் ரகளை: அடி-உதை, சட்டை கிழிப்பு 
புதுவை மாநில தி.மு.க. அமைப்பாளராக இருந்த ஜானகிராமன் சமீபத்தில் மாற்றப்பட்டு அவருக்கு பதிலாக டாக்டர் எம்.ஏ.எஸ். சுப்பிரமணியம் புதிய அமைப்பாளராக நியமிக்கப்பட்டார். 

இதைத்தொடர்ந்து மாநில தி.மு.க. செயற்குழு கூட்டம் புதுவை கந்தப்ப முதலியார் வீதியில் உள்ள கலைஞர் இல்லத்தில் இன்று நடந்தது. 

கூட்டத்துக்கு அவை தலைவர் சுப்புராயன் தலைமை தாங்கினார். மாநில அமைப்பாளர் டாக்டர் எம்.ஏ.எஸ்.சுப்பிரமணியன், முன்னாள் அமைப்பாளர் ஜானகிராமன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டம் நடந்த மண்டபத்துக்கு வெளியே ஏம்பலம் தொகுதி செயலாளர் செல்வம் தனது ஆதரவாளர்களுடன் நின்று கொண்டிருந்தார். அப்போது சிலர் கும்பலாக வந்து அவருடன் தகராறு செய்தனர். 

செயற்குழு கூட்டத்துக்கும் உங்களுக்கும் சம்பந்தம் இல்லை. நீங்கள் எப்படி இங்கு வரலாம் என்று கூறி அவரை தாக்கினார்கள். சரமாரியாக அடி-உதை விழுந்தது. அப்போது இரு தரப்பினரும் கடுமையாக மோதிக்கொண்டனர். அதில் பலருடைய சட்டை கிழிந்தது. பின்னர் செயற்குழு கூட்டம் தொடங்கியது. 

கூட்டம் தொடங்கியதும் டாக்டர் எம்.ஏ.எஸ். சுப்பிரமணியன் பேசினார். அவர் பேசும் போது புதுவையில் தி.மு.க. ஏற்கனவே 4 முறை ஆட்சியில் இருந்த கட்சி. மீண்டும் தி.மு.க.வை ஆட்சி கட்டிலில் அமர்த்த வேண்டியது தொண்டர்கள் ஒவ்வொருவர் கடமை. 

முதல் கட்டமாக உள்ளாட்சி தேர்தலில் தி.மு.க.வை வெற்றி பெற செய்து வெற்றி கனியை தலைவர் கலைஞரிடமும், தளபதியிடமும் சமர்ப்பிப்போம் என்று உறுதி ஏற்போம் என்று பேசினார். பின்னர் செயற்குழுவின் தீர்மானங்களை டாக்டர் எம்.ஏ.எஸ். சுப்பிரமணியன் வாசிக்க தொடங்கினார். இதில் முதல் தீர்மானமாக கந்தப்ப முதலியார் நகரில் உள்ள எனது இல்லமான கலைஞர் இல்லத்தை மனமுவந்து கட்சிக்கு அளிக்கிறேன் என்று வாசித்தார். அப்போது கடும் எதிர்ப்பு கிளம்பியது. 

ஒரு சாரார் சரமாரியாக கேள்வி எழுப்பினார்கள். 2 வீடுகள், ஒரு ஓட்டல் எழுதி கொடுத்தால் அமைப்பாளர் பதவி கொடுப்பார்களா? அ.தி.மு.க.வில் இருந்து வந்தவருக்கு அமைப்பாளர் பதவியா? உண்மையான விசுவாசிகளுக்கு கட்சியில் மதிப்பு கிடையாதா? கட்சியில் உண்மையாக உழைத்தவர்களுக்கு பதவி கிடையாதா? என சரமாரியாக கேள்வி கேட்டனர். 

அப்போது பின்னால் அமர்ந்து இருந்த சிலர் தண்ணீர் பாட்டில்களை தலைவர்கள் அமர்ந்து இருந்த பகுதி நோக்கி வீசினார்கள். நாற்காலிகளையும் தூக்கி வீசினார்கள். இதனால் பெரும் மோதல் ஏற்படும் சூழல் உருவானது. 

இதையடுத்து முன்னாள் எம்.பி. சி.பி. திருநாவுக்கரசு கூட்டம் முடிந்து விட்டது என்று கூறி நிர்வாகிகளை கலைந்து செல்லும்படி கேட்டுக்கொண்டார். இதனால் அனைவரும் கலைந்து சென்றனர். கூட்டம் பாதியில் முடிந்தது.

ad

ad