புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

9 அக்., 2012


யாழ். குடாநாட்டில் படையினருக்கு காணிகள் வழங்கக்கூடாது! ஈபிடிபி உட்பட தமிழ்க் கட்சிகள் ஒருமித்த கருத்து
யாழ்.குடாநாட்டில் படையினரின் தேவைகளுக்காகக் காணிகள் எதனையும் வழங்குவதில்லை எனவும், காணிகளைக் கையகப்படுத்தும் நடவடிக்கைகளை முற்றாக எதிர்ப்பதாகவும் தமிழ்க் கட்சிகள் ஒருமித்த குரலில் கருத்து வெளியிட்டுள்ளன.
யாழ். மாவட்ட செயலகத்தில் நேற்றுத் திங்கட்கிழமை நடைபெற்ற மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்திலேயே இவ்வாறு ஒருமித்த கருத்து வெளியிடப்பட்டது.
இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களால் முன்வைக்கப்பட்ட கருத்துக்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவும், அரசதரப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களான மு.சந்திரகுமார், சில்வெஸ்திரி அலன்ரின் ஆகியோரும் ஆதரவு தெரிவித்தனர்.
இதனையடுத்து இதுகுறித்து எதிர்வரும் நவம்பர் மாதம் முதலாம் திகதி விசேட கூட்டம் ஒன்றை நடத்தி ஆராய்வது எனவும் முடிவு எடுக்கப்பட்டது. படையினருக்கு யாழ்ப்பாணத்தில் காணிகள் வழங்கப்படக் கூடாது. அதற்காக மேற்கொள்ளும் முயற்சிகள் உடன் தடுத்து நிறுத்தப்பட வேண்டும்.
பொதுமக்களின் காணிகள் சுவீகரிக்கும் உரிமை யாருக்கும் இல்லை. எனவே இந்தக் காணிக சுவீகரிப்பு முற்றாக நிறுத்தப்பட வேண்டும் எனத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப் பினர்கள் அனைவரும் ஒரே குரலில் தெரிவித்தனர்.
இதனையடுத்து அங்கு கருத்து வெளியிட்ட அரச தரப்பு நாடாளுமன்ற உறுப்பினரான மு.சந்திரகுமார், "படையினருக்குக் காணிகள் வழங்கக் கூடாது என்பது எங்களுக்கும் விரும்பம்தான். அதற்காக மீண்டும் ஆயுதப் பேராட்டத்தைச் சந்திக்க இந்த மக்கள் தயாரில்லை.
இந்தக் காணி சுவீகரிப்பை நாங்களும் விரும்பவில்லை. அது அரச காணிகளாக இருக்கட்டும். தனியார் காணிகளாக இருக்கட்டும். ஒரு இணக்கத்தின் அடிப்படையில் அதைத் தடுப்போம்'' என்று கூறினார்.
இதனைத் தொடர்ந்து படையினருக்குக் காணிகள் வழங்கப்படக் கூடாது என்ற தீர்மானத்தை இந்தக் கூட்டத்தில் நிறைவேற்ற வேண்டும். அதனை நான் முன்மொழிகின்றேன் என்று நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் கூறினார். அதற்குப் பதிலளித்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, "இது தொடர்பில் சாதக பாதகங்களை ஆராய்ந்த பின்னரே தீர்மானமாக எடுக்க முடியும்.'' என்று கூறினார்.
இதனைத் தொடர்ந்து இதுகுறித்து எதிர்வரும் நவம்பர் மாதம் முதலாம் திகதி விசேட கூட்டம் ஒன்றில் ஆராய்வது என முடிவு செய்யப்பட்டது. யாழ்.மாவட்ட ஒருங்கிணைப்புக் கூட்டம் 11 மாதங்களின் பின்னர் நேற்று யாழ்.மாவட்ட செயலர் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, வடமாகாண ஆளுநர் ஜி.ஏ.சந்திரசிறி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராஜா, சுரேஷ் பிரேமச்சந்திரன், அ.விநாயகமூர்த்தி, ஈ.சரவணபவன், சிவஞானம் சிறிதரன், எம்.ஏ.சுமந்திரன் மற்றும் அரச தரப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களான மு.சந்திரகுமார், சில்வெஸ்திரி அலன்ரின் ஆகியோரும் கலந்துகொண்டனர்.

ad

ad