புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

5 அக்., 2012

பரபரப்பான போட்டியில் பாகிஸ்தானை வீழ்த்தி இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது இலங்கை
 




இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான பரபரப்பான அரையிறுதி போட்டியில் இலங்கை
அணி பாகிஸ்தான் அணியை வீழ்த்தி இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது. 140 என்ற வெற்றி இலக்கை அடைய துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 123 ஓட்டங்களை பெற்று தோல்வியை தழுவியது.

கொழும்பு ஆர்.பிரேமதாச மைதானத்தில் இடம்பெற்ற இப்போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.
இலங்கை அணியில் அக்கில தனஞ்ஜெய நீக்கப்பட்டு ரங்கன
ஹேரத்த இணைக்கப்பட்டார். மேலும் தினேஸ் சந்திமால், சமிந்த ஹேரங்க, டில்சான் முனவீர ஆகியோர் களமிறங்கவில்லை.

பாகிஸ்தான் அணியில் அப்துல் ரசாக் நீக்கப்பட்டு சொஹைல் தன்வீர் அணியில் இணைத்து கொள்ளப்பட்டார்.
அந்தவகையில் இலங்கை அணிக்கு ஆரம்பத்தை பெற்று கொடுக்க டில்சான் மற்றும் மஹேல ஜயவர்தன ஆகியோர் களமிறங்கினர்.

இருவரும் பெட்டிங் பவர் பிளேயில் 34 ஓட்டங்களை மாத்திரம் பெற்றனர். ஜயவர்தன மாத்திரம் குறித்த ஆறு ஓவரில் சில பவுண்டரிகளை விரட்டினார். டில்சான் 16 பந்துகளில் வெறும் 8 ஓட்டங்களை மாத்திரம் பெற்றார்.

இதன்பின்னர் அதிரடியை தொடர்ந்த மஹேல ஜயவர்தன சயிட் அப்ரிடி வீசிய 10.2 பந்தில் பிடிகொடுத்து 42 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார்.

இதன்போது டில்சான் மற்றும் மஹேல ஆகியோர் முதல் விக்கெட்டுக்காக இணைப்பாட்டமாக 63 ஓட்டங்களை பெற்றனர்.
இதன் பின்னர் களத்திலிருந்த டில்சானுடன் சங்கக்கார கைகோர்த்தார். முதல் பந்தை சந்தித்த சங்கக்கார 4 ஓட்டங்களுடன் அதிரடியாக ஆட்டத்தை ஆரம்பித்தார். ஆனால் இந்த அதிரடி நீண்ட நேரம் நீடிக்கவில்லை. சங்கக்கார அடித்து ஆட முற்பட்ட போது முஹமட் ஹாபிஸ் வீசிய 12.5ஆவது பந்தில் பிடிகொடுத்து 18 ஓட்டங்களுடன் அரங்கு திரும்பினார்.

தொடர்ந்து ஜீவன் மெண்டிஸ் களமிறங்கினார். களத்திலிருந்த டில்சான் அதிரடியை காட்ட முற்பட்ட போது 35 ஓட்டங்களுடன் உமர் குல் வீசிய 17.5 பந்தில் எல்.பி.டபிள்யு. முறையில் ஆட்டமிழந்தார்.

இதனையடுத்து திசர பெரேரா களமிறங்க மறுமுனையில் இருந்த ஜீவன் மெண்டிஸ் சயிட் அஜ்மால் வீசிய 18.1ஆவது பந்தில் 15 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார்.

இதனையடுத்து மெத்தியூஸ் களமிறங்கி 10 ஓட்டங்களை பெற திசர பெரேரா 11 ஓட்டங்களை பெற்றார். இதனையடுத்து இலங்கை அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகளை மாத்திரம் இழந்து 139 ஓட்டங்களை பெற்றது.

பாகிஸ்தான அணியின் பந்து வீச்சில் சயிட் அஜ்மால், அப்ரிடி, ஹாபிஸ், உமர் குல் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டுகளை கைப்பற்றினர். 

தொடர்ந்து 140 என்ற வெற்றி இலக்கை அடைய துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 123 ஓட்டங்களை பெற்று தோல்வியை தழுவியது.

பாகிஸ்தானில் ஆரம்ப வீரர்களாக களமிறங்கிய முஹமட் ஹாபிஸ் மற்றும் இம்ரான் நசீர் ஆகியோர் நல்ல ஆரம்பத்தை பெற்றுக்கொடுத்தனர்.


இருவரும் முதல் விக்கெட்டுக்காக இணைப்பாட்டமாக 31 ஓட்டங்களை பெற்ற போது இம்ரான் நசீர் 20 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார். இதன் பின்னர் பாகிஸ்தான் அணிக்கு தொடர் அதிர்ச்சிகள் காத்திருந்தன. அதாவது தொடர்ந்து களமிறங்கிய நசீர் ஜேம்ஸ்ட் (4), கம்ரான் அக்மால் (1), சொயிப் மாலிக் (6) என ஏமாற்றமளித்து வந்த வேகத்தில் அரங்கு திரும்பினர்.

இதன்பின்னர் களத்திலிருந்து அதிரடியை தொடங்கிய ஹாபிஸ் ரங்கண ஹேரத் வீசிய 14.1 பந்தில் ஸ்டம் அவுட் முறையில் 42 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்க அடுத்த களம் கண்ட சயிட் அப்ரிடி அடுத்த பந்திலேயே போல்ட் முறையில் ஆட்டமிழந்து அரங்கு திரும்பினார்.

இதனால் மைதானமே மகிழ்ச்சி ஆரவாரத்தில் பொங்கியது. ஆனால் பாகிஸ்தான் தடுமாற்றத்துக்குள்ளானது.

பின்னர் பாகிஸ்தான் அணியை வீழ்ச்சியிலிருந்து மீட்க உமர் ஹக்மாலுடன் சுஹைல் தன்வீர் இணை சேர்ந்தார். இருவரும் நிதானமாக துடுப்பெடுத்தானர். இதன்போது பாகிஸ்தான் வெற்றிக்கு 18 பந்துகளுக்கு 32 ஓட்டங்கள் தேவைப்பட்டன. இதனால் மைதானமே பரபரப்பாக இருந்தது. அஜந்த மெண்டிஸ் வீசிய 17.4ஆவது பந்தில் சுஹைல் தன்வீர் 8 ஓட்டங்களுடன் அரங்கு திரும்பினார்.

இந்நிலையில் கடந்த போட்டிகளில் பாகிஸ்தான் வெற்றிக்கு காரணமாக இருந்த உமர் குல் களமிறங்கினார். இந்த ஓவரில் 5 ஓட்டங்கள் மாத்திரமே பெறபட்டது.

பின்னர் 12 பந்துகளில் 27 ஓட்டங்கள் பாகிஸ்தான் அணிக்கு தேவைப்பட்டது. மாலிங்க வீசிய 81.1 பந்தில் ஆட்டமிழப்பொன்று தவறவிடப்பட்டது.

பின்னர் ஆறு பந்துகளில் 23 ஓட்டங்கள் தேவைப்பட்டன. ஆனால் குலசேகர வீசிய ஓவரில் 6 ஓட்டங்களை மாத்திரமே பெறமுடிந்தது.

இதனால் பாகிஸ்தான் அணி 16 ஓட்டங்களால் தோல்வியை தழுவியது.

இலங்கை அணியின் பந்து வீச்சில் ரங்கண ஹேரத் 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார். போட்டியின் ஆட்டநாயகனாக மஹேல ஜயவர்தன தெரிவு செய்யப்பட்டார்.

ad

ad