புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

14 அக்., 2012

 இம் முறை வழமைபோல மாவீரர் தினம் லண்டன் எக்ஸெல் மண்டபத்தில் நடைபெறும் என்று ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளார்கள். 


2009ம் ஆண்டுக்குப் பின்னர், புலம்பெயர் நாடுகளில் பல குழப்பமான சூழல் காணப்பட்டது யாவரும் அறிந்ததே. குறிப்பாக லண்டனில் மாவீரர் தினத்தில் பல குழப்பங்கள் காணப்பட்டது. ஆனால் இம் முறை வழமைபோல மாவீரர் தினம் லண்டன் எக்ஸெல் மண்டபத்தில் நடைபெறும் என்று ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளார்கள். எக்ஸெல் மண்டபத்தின், பாரிய பகுதியை ஏற்பாட்டாளர்கள் பதிவுசெய்துள்ளனர். ஆயிரக்கணக்கான மக்களை உள்ளடக்கக்கூடிய மண்டபத்தில் மாவீரர் தின நிகழ்வுகள் வழமைபோல நடைபெறவுள்ளது.

நவம்பர் 27ம் நாள் காலை 10.30 மணிக்கு மண்டபம் திறக்கப்பட்டு, 11.30 மணிக்கு நிகழ்வுகள் ஆரம்பமாகவுள்ளது. எக்ஸெல் மண்டபத்தில் நிகழ்வுகள் நடைபெறவுள்ளதால், பிரித்தானியாவின் ஆளும் மற்றும் எதிர்கட்சிகளின் எம்.பீக்கள் பலர் இதில் கலந்துகொள்ளவுள்ளனர். குறிப்பாக தமிழ் நாட்டில் இருந்து பல தமிழ் உணர்வாளர்கள் இதில் பங்கேற்கலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. புலம்பெயர் தமிழ் மக்கள் பிளவுபட்டு இருப்பதாகவும், மாவீரர் தின நிகழ்வுகள் இம்முறையும் இரண்
டாக நடக்கும் எனவும், இலங்கை அரசு, எண்ணியிருந்தவேளை சிங்கள அரசுக்கு மேலும் ஒரு சாட்டையடி வீழ்ந்துள்ளது.

பல ஆண்டுகளாக லண்டனில் மாவீரர்தின நிகழ்வுகள் எக்ஸெல் மண்டபத்திலேயே நடைபெற்று வந்தது. இதற்கு அமைவாக பொலிசாரும் மற்றும் மண்டப அதிகாரிகளும் தற்போது அனுமதியை வழங்கியுள்ளனர். லண்டன் எக்ஸெல் மண்டபத்தில் நடைபெறவுள்ள மாவீரர் தினத்தை குழப்ப, சில சக்திகளை இலங்கை அரசு ஏவி விட்டிருந்தது யாவரும் அறிந்த விடையம். இச் சக்திகளை உடைத்து, பாரிய மண்டபத்தில் மீண்டும் மாவீரர் தின நிகழ்வுகள் வெற்றிகரமாக நடக்கவுள்ளது. தமது இளமைக்கால நினைவுகள் அனைத்தையும் துறந்து, தமிழீழம் காணப் போராடி மடிந்து, வித்துக்களான மாவீரச் செல்வங்களை நினைவுகூரும் நாளை நெஞ்சில் நிறுத்தி, நாம் புலம்பெயர் மக்களின் சக்தியை வெளியுலகிற்கு காட்டும் நாள் இது. சிங்கள அரசுக்கும் , மற்றும் அனைத்துலக சமூகத்திற்கும் தமிழ் மக்கள் இந் நாளில் ஒரு செய்தியை தெளிவாகச் சொல்லவேண்டும்.

அதற்கு மக்களே அணி திரண்டு வாருங்கள் எக்ஸெல் மண்டபத்தை நோக்கி !

ad

ad