புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

22 அக்., 2012


"மாவீரர் நாள் உரை' நிகழ்த்த வைகோ அடுத்த மாதம் லண்டன் பயணம்
புலிகள் இயக்க தலைவர் பிரபாகரனின், பிறந்த நாளையொட்டி வரும் நவம்பர்  மாதம் லண்டனில் நடக்கவுள்ள விடுதலைப்புலிகள் ஆதரவாளர் கூட்டத்தில் பங்கேற்க ம.தி.மு.க. பொதுச்செயலர் வைகோ ‌செல்கிறார்.
தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்க தலைவர் பிரபாகரன், இறுதிப் போர் நடைபெற்ற காலப்பகுதிக்கு முன்னர், ஒவ்வொரு ஆண்டும், தன் பிறந்த நாளன்று, தொலைக்காட்சியில் தோன்றி,
"மாவீரர் நாள்  உரை' நிகழ்த்துவார்.
கடந்த, 2009ம் ஆண்டு, இலங்கை இராணுவத்தினருக்கும், விடுதலைப்புலிகளுக்கும் நடந்த போரில், பிரபாகரன் கொல்லப்பட்டார் என இலங்கை அரசாங்கத்தினால் அறிவிக்கப்பட்டது.
இந்த சம்பவத்துக்கு பிறகு, லண்டனில் உள்ள இலங்கை தமிழர்கள், அவரது பிறந்த தினம் அன்று, முக்கிய தலைவர்களை அழைத்து, மாவீரர் நாள்  உரை' நிகழ்த்தும் நிகழ்ச்சியை, நடத்தி வருகின்றனர்.
பிரபாகரனின் பிறந்த நாள், அடுத்த மாதம், 26ம் தேதி வருகிறது. அன்று அல்லது மறு நாள், லண்டனில், இலங்கை தமிழ் சங்கத்தின் சார்பில், மாவீரர் நாள் உரை' நிகழ்த்துவதற்கு, தமிழகத்திலிருந்து, இரு தலைவர்கள் அழைக்கப்பட்டுள்ளனர் என தெரிவிக்கப்படுகிறது.
அவர்களில் ஒருவர், வைகோ என, கூறப்படுகிறது. இதற்காக, நீதிமன்ற உத்தரவின் மூலம், ஏற்கனவே தனது பாஸ்போட்டை பெற்றுள்ளார்.
எனவே, அடுத்த மாதம், 26ம் தேதி, லண்டன் நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக, வை.கோபாலசாமி லண்டன் செல்வார் என, அக்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ad

ad