புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

17 அக்., 2012

சிறைகளில் தொடரும் தமிழ் அரசியல் கைதிகள் மீதான கொடுமைகள்: சிங்கள இணையம் தகவல்

சிறிலங்கா சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அப்பாவிகளான தமிழ் அரசியல் கைதிகளின் மீது தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்டு வரும் மிலேச்சனத்தனமான கொடுமைகளை சிங்கள இணையம் ஒன்று அம்பலப்படுத்தியுள்ளது.


2009 ஆம் வருடம் மே மாதம் அக்கரைப்பற்றில் கைது செய்யப்பட்ட கபிலன் என்வர் மீது மொனராகலைச் சிறைச்சாலை அதிகாரிகள் மனிதாபிமானமற்ற முறையில் தாக்குதலை மேற்கொண்டுள்ளனர் .இந்தத் தாக்குதல் காரணமாக குறித்த கைதியின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. இவ்வாறானதொரு நிலையில் அந்தக் கைதி வெலிக்கடைச் சிறைச்சாலைக்கு மாற்றப்பட்டார். இருப்பினும் அவர் சிறைச்சாலை வைத்தியசாலையில் கூட அனுமதிக்கப்படவில்லை. இதனால் அவரது தலைப் பகுதியில் தொடர்ந்தும் இரத்தக் கசிவு ஏற்பட்ட வண்ணமே உள்ளது.
2009 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 18 ஆம் திகதி மட்டக்களப்பில் வைத்துக் கைது செய்யப்பட்ட இன்னொரு தமிழ்க் கைதியான சுந்தரலிங்கம் கேதீஸ்வரன் கடந்த 12 ஆம் திகதி மொனராகலை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவதற்காக அழைத்து வரப்பட்டிருந்தார். அன்றைய தினம் அவர், தனக்கு எ
திராக எவ்வாறான குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன என்பது குறித்துக் கூட ஒன்றுமே அறியாதிருந்துள்ளார். பின்னர் அவர் நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்ட போது இந்த கைதியின் சார்பில் வாதாட எந்த வழக்கறிஞரும் இருக்கவில்லை.

இதன்போது அங்கிருந்த சிறைச்சாலை அதிகாரி ஒருவர் இந்தக் கைதிமீது போலியான குற்றச்சாட்டுகளைச் சுமத்தி அவற்றினை ஒப்புக் கொள்ளுமாறு அச்சுறுத்தியுள்ளார். இதனால் அச்சமும் மனவிரக்தியும் அடைந்த அந்தக் கைதி தன்னைத்தானே பிளேட்டினால் வெட்டிக் கொண்டுள்ளார். ஆனால், இவருக்கு ஏற்பட்ட காயங்களுக்குத் தேவையான சரியான சிகிச்சை இதுவரை அளிக்கப்படவில்லை.

இதுபோன்றே காலி சிறைச்சாலையில் வைத்து கடுமையான தாக்குதலுக்கு ஆளான இன்னொரு தமிழ் அரசியல் கைதியான சுந்தரம் சதீஸ் என்பவரின் நிலையுமாகும்.இந்தக் கைதி சிறைச்சாலை அதிகாரிகளின் மிலேச்சனத் தாக்குதல் காரணமாக சுய நினைவை இழந்தமை குறிப்பிடத்தக்கது. இந்தக் கைதியின் மனைவியின் மூலமே விடயம் வெளிசத்துக்கு வந்திருந்தமை தெரிந்ததே என அந்தச் சிங்கள இணையம் தெரிவித்துள்ளது.

ad

ad