புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

9 அக்., 2012

ஏனைய துறைகளைப் போல் நீதித்துறையையும் அடக்கியாள அரசு முயற்சிக்கின்றது: சட்டத்தரணி ரத்தினவேல்
ஏனைய துறைகளைப் போல் நீதித்துறையையும் தன்னகப்படுத்தி அடக்கியாள அரசு முயற்சிக்கின்றது என ஜனநாயகத்துக்கான சட்டத்தரணிகள் சங்கத்தின் சிரேஷ்ட உறுப்பினர் கே. எல். ரத்தினவேல் தெரிவித்தார். 
நீதிச்சேவை ஆணைக்குழுவின் செயலாளர் மஞ்சுள திலகரட்ன தாக்கப்பட்டதைக் கண்டித்து இன்றைய
தினம் புதுக்கடை நீதிமன்றில் பணியாற்றும் சட்டத்தரணிகள் மற்றும் நீதிமன்ற ஊழியர்களால் நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே சிரேஷ்ட சட்டத்தரணி ரத்தினவேல் இவ்வாறு குறிப்பிட்டார். 
 

அவர் இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,

அண்மைக் காலமாக அரசு ஒவ்வொரு துறைகளையும் தனது அதிகாரக் கரத்தால் தன்னகப்படுத்த முயல்கின்றது. இதன் வெளிப்பாடே நீதிச்சேவை ஆணைக்குழுவின் செயலாளர் தாக்கப்பட்ட சம்பவமாகும். ஆனால் இதுபோன்ற செயல்களுக்கு நாங்கள் இடமளிக்கமாட்டோம். நாட்டின் ஜனநாயகத்தை சாகடிக்க அரசு முயல்கிறது. இதை சட்டத்தரணிகள் மாத்திரமன்றி அனைத்துத் தரப்பினர்களும் எதிர்க்க வேண்டும் என அவர் குறிப்பிட்டார்.

ad

ad