புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

2 அக்., 2012


விஸ்வமடு காட்டில் அதிக வலு எஞ்ஜின்களுடன் கூடிய இரு படகுகள் மீட்பு
முல்லைத்தீவு விஸ்வமடு பிரதேச காடொன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த அதிக வலுவைக் கொண்ட எஞ்ஜின்களுடனான இரண்டு படகுகள் நேற்று கைப்பற்றப்பட்டுள்ளன.
வவுனியா காவல்துறை பயங்கரவாத விசாரணைப் பிரிவினரால் இந்த படகுகள் கைப்பற்றப்பட்டுள்ளன.
கைப்பற்றப்பட்ட படகுகள் கடற்புலிகளால் உபயோகிக்கப்பட்டவை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தவிர, கிளிநொச்சி, மாங்குளம் பிரதேசத்தில் புதைக்கப்பட்டிருந்த 25 மோட்டார் ஷெல் ரவைகள் உள்ளிட்ட யுத்த தளபாடங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக வவுனியா காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இறுதிக் கட்ட யுத்தத்தின் போது, பயன்படுத்துவதற்காக இவை மறைத்து வைக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.
படகுகளில் பொருத்தப்பட்டிருந்த ஆயுதங்கள் இன்னமும் பாவனைக்கு உட்படுத்தக் கூடிய தன்மையை கொண்டிருப்பதாக பொலிஸ் பயங்கரவாத விசாரணைப் பிரிவு சுட்டிக்காட்டியுள்ளது.

ad

ad