புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

12 அக்., 2012

தகுதி சுற்றில் சியால்கோட், ஹாம்ப்ஷைர் அணிகளை வீழ்த்திய நியூசிலாந்தை சேர்ந்த ஆக்லாந்து அணி சாம்பியன்ஸ் லீக் கிரிக்கெட்டின் பிரதான சுற்றுக்கு தகுதி பெற்றது.
சாம்பியன்ஸ் லீக் கிரிக்கெட்

10 அணிகள் பங்கேற்கும் 4ஆவது சாம்பியன்ஸ் லீக் இருபதுக்கு20 கிரிக்கெட் போட்டி தென்னாபிரிக்காவில் எதிர்வரும் 13ஆம் திகதி முதல் 28ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது. இந்த போட்டிக்கு, ஐ.பி.எல்.-ல் கிரிக்கெட்டில் முதல் 4
இடங்களை பிடித்த கொல்கத்தா நைட் ரைடர்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ், டெல்லி டேர்டெ

வில்ஸ், மும்பை இந்தியன்ஸ் மற்றும் அவுஸ்திரேலியாவை சேர்ந்த சிட்னி சிக்சர்ஸ், பெர்த் ஸ்கோர்சர்ஸ், தென்னாபிரிக்காவை சேர்ந்த டைட்டன்ஸ், லயன்ஸ் ஆகிய 8 அணிகள் நேரடியாக தகுதி பெற்றுள்ளன. மீதமுள்ள இரண்டு இடத்திற்கு தகுதி சுற்று நடக்கிறது. தகுதி சுற்றில் விளையாடும் 6 அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன.

இதன்படி பிரிவு-1இல் ஆக்லாந்து (நியூசிலாந்து), சியல்கோட் (பாகிஸ்தான்), ஹாம்ப்ஷைர் (இங்கிலாந்து) ஆகிய அணிகளும், பிரிவு-2இல் ஊவா நெக்ஸ்ட் (இலங்கை), யார்க்ஷைர் (இங்கிலாந்து), டிரினிடாட் அண்ட் டொபாக்கோ (மேற்கிந்திய தீவுகள்) ஆகிய அணிகளும் இடம் பெற்றுள்ளன. இந்த அணிகள் தங்கள் பிரிவில் உள்ள அணியுடன் தலா ஒரு முறை மோதும். லீக் முடிவில் இரண்டு பிரிவிலும் முதலிடம் பிடிக்கும் அணிகள் பிரதான சுற்றுக்கு தகுதி பெறும்.

ஆக்லாந்து வெற்றி

இந்த நிலையில் செஞ்சுரியனில் நேற்று நடந்த ஆட்டத்தில் ஆக்லாந்து-ஹாம்ப்ஷைர் (பிரிவு1) அணிகள் மோதின. முதலில் துடுப்பெடுத்தாடிய ஹாம்ப்ஷைர் அணி, ஆக்லாந்தின் வேகப்பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் தடுமாறியது. தொடக்க ஆட்டக்காரர் மைக்கேல் கார்பெர்ரி (65 ஓட்டங்கள், 65 பந்து, 8 பவுண்டரி, ஒரு சிக்சர்) தவிர மற்ற யாரும் சோபிக்கவில்லை. அப்ரிடி (பாகிஸ்தான்),அணித் தலைவர் மாஸ்கரனாஸ் எவ்வித ஓட்டங்களையும் பெறாது அரங்கு திரும்பினர். 20 ஓவர்கள் முழுமையாக ஹாம்ப்ஷைர் அணியால் 8 விக்கெட் இழப்புக்கு 121 ஓட்டங்களை மாத்திரம் எடுக்க முடிந்தது. மிதவேகப்பந்து வீச்சாளர் அசார் முகமது 4 ஓவர்களில் 24 ஓட்டங்களை விட்டுக்கொடுத்து 5 விக்கெட்டுகளை சாய்த்தார்.

தொடர்ந்து ஆடிய ஆக்லாந்து அணியில் தொடக்க ஆட்டக்காரர்கள் மார்ட்டின் குப்திலும் (38 ஓட்டங்கள், 31 பந்து, 3 பவுண்டரி, 2 சிக்சர்), லோ வின்சென்ட்டும் (19 ஓட்டங்கள்) நல்ல தொடக்கம் தந்தனர். இதன் பிறகு, பந்து வீச்சில் கலக்கிய அசார் முகமது பேட்டிங்கிலும் முத்திரை பதித்தார். அவர் கடைசி வரை களத்தில் நின்று அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றார்.

ஆக்லாந்து அணி 14.3 ஓவர்களில் 2 விக்கெட்டுக்கு 123 ஓட்டங்களை சேர்த்து 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் எளிதில் வெற்றிக்கனியை பறித்தது. அசார் முகமது 55 ஓட்டங்களுடன் (31 பந்து, 5 பவுண்டரி, 4 சிக்சர்) ஆட்டம் இழக்காமல் இருந்தார். இதன் மூலம் 20 ஒவர் கிரிக்கெட்டில் ஒரே இன்னிங்சில் 5 விக்கெட்டுடன் அரைசதமும் அடித்த 5ஆவது வீரர் என்ற சிறப்பை பாகிஸ்தானை சேர்ந்தவரான 37 வயதான அசார் முகமது பெற்றார்.

ஆட்டநாயகன் விருது பெற்ற அவர் கூறுகையில், சியல் கோட் அணிக்கு எதிரான ஆட்டத்தில் எனது முதல் பந்திலேயே சிக்சர் அடிக்கப்பட்டது. இந்த ஆட்டத்திலும் நான் வீசிய முதல் பந்து சிக்சருக்கு பறந்தது. ஆனால் மகிழ்ச்சி அளிக்கும் விதமாக சரிவில் இருந்து மீண்டு விட்டேன். அடுத்த ஆட்டத்தில் முதல் பந்தை சரியாக வீசுவேன் என்று நம்புகிறேன். ஆக்லாந்து அணியுடன் நேரத்தை செலவிடுவது இனிமையான விடயம் என்றார்.

சியால்கோட் வெளியேற்றம்

முன்னதாக நேற்று முன்தினம் இரவு நடந்த ஆட்டத்தில் ஆக்லாந்து அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் சோயிப் மாலிக் தலைமையிலான பாகிஸ்தானின் சியால்கோட் அணியை வீழ்த்தியது. இதில் முதலில் ஆடிய சியல்கோட் அணி 9 விக்கெட் இழப்புக்கு 130 ஓட்டங்களை எடுத்தது. பின்னர் ஆடிய ஆக்லாந்து அணி 17.1 ஓவர்களில் இலக்கை எட்டிப்பிடித்தது.

தொடர்ந்து இரு வெற்றிகளை பெற்றதன் மூலம் ஆக்லாந்து அணி சாம்பியன்ஸ் லீக் கிரிக்கெட்டில் பிரதான சுற்றில் விளையாட தகுதி பெற்றது. சாம்பியன்ஸ் லீக்கில் பிரதான சுற்றில் விளையாட தகுதி பெற்ற முதல் நியூசிலாந்து அணி ஆக்லாந்து என்பது குறிப்பிடத்தக்கது. இந்த பிரிவில் இடம் பெற்ற மற்ற இரு அணிகளான சியல்கோட் மற்றும் ஹாம்ப்ஷைர் அணிகள் தகுதி வாய்ப்பை இழந்தன.

தகுதி சுற்றுகள் இன்றுடன் முடிகின்றன. இறுதி நாளான இன்று(வியாழக்கிழமை) டிரினிடாட் அண்ட் டொபாக்கோ-உவா நெக்ஸ்ட், ஹாம்ப்ஷைர்-சியால்கோட் அணிகள் மோதுகின்றன. இதில் ஹாம்ப்ஷைர்-சியால்கோட் அணிகள் இடையிலான ஆட்டத்தின் முடிவு எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது.

ad

ad