புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

3 நவ., 2012

தொழுகையில் ஈடுபட்டிருந்தோர் மீது தாக்குதல்: பள்ளிவாசல் உடைப்பு, 10க்கும் மேற்பட்டோர் வைத்தியசாலையில்
குருநாகலை, தொடங்கஸ்லந்த தேர்தல் தொகுதிக்குட்பட்ட தெலும்புகல்ல பிரதேசத்தில் பள்ளிவாசல் ஒன்றில் தொழுகை நடத்தியோர் மீது சுமார் 60 பேர் கொண்ட குழுவினர் தாக்குதல் நடத்தியதுடன் பள்ளியினையும் உடைத்து சேதப்படுத்தியுள்ளனர்.
 


இதனையடுத்து தாக்குதல் சம்பவத்தில் காயமடைந்த 10க்கும் மேற்பட்டோர் ரிதிகம மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கொகரல்ல பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

பழைமைவாய்ந்த ஜும்ஆப் பள்ளிவாசலுடன் முரண்பட்டுக் கொண்டு பிரிந்த சென்ற அணியினர்
புதிய ஜும்ஆப் பள்ளிவாசலை ஆரம்பித்ததுள்ளனர். பின்னர் நீதி மன்றத்தில் இரு சாராருக்கிடையே இது
குறித்த வழக்குத் தொடரப்பட்டுள்ளது.

இந்நிலையில் நீதிமன்றம் புதிய பள்ளிவாசலைச் சார்ந்த குழுவினருக்கு தொழுகையை மேற்கொள்ளுமாறு தீர்ப்பு வழங்கியது. இதனை அடுத்து புதிய பள்ளியில் இந்த அணியினர் தொழுகையை மேற்கொண்டிருந்த போது அங்கு வந்த மற்றுமொரு குழுவினர் தாக்குதலை மேற்கொண்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் கொகரல்ல பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

குறித்த பிரதேசத்தில் சில காலமாக இரு மார்க்கக் குழுக்களுக்கிடையே நிலவி வந்த கருத்து வேறுபாடே குறித்த கைகலப்புக்கு காரணம் என தெரிவிக்கப்படுகின்றது.

ad

ad