புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

20 நவ., 2012


நித்தியானந்தா ஆசிரமத்தில் இருந்த 1008 லிங்கங்களும் இடித்து தரைமட்டம்!
திருவண்ணாமலை நித்தியானந்தா ஆசிரமத்தை கையகப்படுத்த இந்து சமய அறநிலையத்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இதனை எதிர்த்து நித்தியானந்தா சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் தடை கேட்டு வழக்கு தாக்கல் செய்துள்ளனர். இந்த வழக்கு நீதிமன்றத்தில் நடந்து வரும் நிலையில் 19.11.2012 இரவு முதல் நித்தியானந்தா ஆசிரமத்தில் அமைக்கப்பட்டுள்ள 1008 லிங்கங்களும் இடித்து தள்ளப்பட்டுள்ளன.
இதுபற்றி நித்தியானந்தா ஆசிரமத்தில் உள்ள ஒருவர் கூறும்போது, ஆசிரமத்திற்குள் சுவாமி சிலைகள் லிங்கங்கள் வைத்து பூஜைகள் செய்யப்படுகின்றன. பொதுமக்களின் வழிபாடும் நடக்கின்றன. இதனை காரணம் காட்டியே தமிழக அரசு ஆசிரமத்தை கையகப்படுத்த முயல்கிறது. ஆசிரமம் கையைவிட்டு போகக்கூடாது என்பதற்காகவே ஆசிரமத்தில் உள்ள சுவாமி சிலைகள் லிங்கங்கள் போன்றவை இடித்து அப்புறப்படுத்தப்படுகின்றன என தெரிவித்தார். 
நித்தியானந்தாவின் இந்த செயலை திருவண்ணாமலையில் உள்ள இந்து சமய அறநிலைய அலுவலர்கள் கவனித்து மேலிடத்திற்கு தகவல் கூறியுள்ள

ad

ad