புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

6 நவ., 2012

110 அகதிகளுடன் படகொன்று கிறிஸ்மஸ் தீவில் இடைமறிப்பு
110 அகதிகளுடன் படகொன்று இன்று காலை கிறிஸ்மஸ் தீவு கடற்பிராந்தியத்தில் இடைமறிக்கப்பட்டதாக அவுஸ்திரேலிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
 
இலங்கையர் உள்ளிட்ட அகதிகள் உடனடியாக கிறிஸ்மஸ் தீவுக்கு கொண்டு செல்லப்பட்டு ஆரம்ப பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் அவர்கள் குறித்த விபரங்கள் சேகரிக்கும் நடவடிக்கைகளுக்கு உட்படுத்தப்பட்டதாகவும் அந்த ஊடகம் மேலும்  தெரிவித்துள்ளது.
 
இதேவேளை, கடந்த வெள்ளிக்கிழமை முதல் இன்று வரையான நான்கு நாள் காலப் பகுதியில் 6 படகுகளில் அவுஸ்திரேலியா செல்ல முனைந்த 429 பேர் அதிகாரிகளால் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
 
இதுதவிர, அவுஸ்திரேலியாவில் அகதி அந்தஸ்து கோருபவர்களின் மனுக்கள், அவுஸ்திரேலியாவிற்கு வெளியே பரிசீலிக்கப்படும் என கடந்த ஓகஸ்ட் மாதம் அரசாங்கம் எடுத்த முடிவின் பின்னர் இன்று வரை 100ற்கும் மேற்பட்ட 6 ஆயிரம் பேர் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
 
இந்த சம்பவம் குறித்து அவுஸ்திரேலிய நாடாளுமன்றத்தின் எதிர்க்கட்சித் தலைவர் டோனி எப்பொட் அதிருப்தி வெளியிட்டுள்ளார்.
 
அகதிகளின் வருகை குறித்து அவுஸ்திரேலிய அரசாங்கம் முற்றாக கட்டுப்பாட்டை இழந்துள்ளதாக கன்பராவில் நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார். 
 
தினமும், பல நாடுகளைச் சேர்ந்த அகதிகள் வருவதை கட்டுப்படுத்துவதற்கான உறுதியான திட்டம் எதனையும் அரசாங்கம் கொண்டிருக்கவில்லை என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்

ad

ad