புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

1 நவ., 2012

மகளிர் ஆசிய கோப்பை இருபது ஓவர் கிரிக்கெட் இறுதிப்போட்டியில் பாகிஸ்தான் அணியை 18 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய அணி கோப்பையைக் கைப்பற்றியது.
 முதலில் பேட் செய்த இந்திய அணி 20 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 81 ரன்கள் சேர்த்தது. பின்னர் பேட் செய்த பாகிஸ்தான் அணி 19.1 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 63 ரன்கள் மட்டுமே சேர்த்து தோல்வியைத் தழுவியது.
 சீனாவில் புதன்கிழமை நடைபெற்ற இறுதிப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கைத் தேர்வு செய்தது.


 தொடக்க ஆட்டக்காரர்களாக சுலக்ஷனா நாயக், அனுஜா பாட்டீல் களமிறங்கினர். இந்த ஜோடி சொற்ப ரன்களிலே ஆட்டமிழந்தது. அதனால் 1.3 ஓவர்கள் முடிவில் 4 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இந்தியா இழந்தது.
 பின்னர் ஜோடி சேர்ந்த பூனம் ராவத், கெüர் ஆகியோர் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். அதனால் அணியின் ஸ்கோர் மெதுவாக உயர்ந்தது. அணியின் ஸ்கோர் 36 ஆக உயர்ந்தபோது சிறப்பாக ஆடி வந்த ராவத் ஆட்டமிழந்தார். அவர் 28 பந்துகளில் 3 பவுண்டரிகளுடன் 25 ரன்கள் எடுத்தார்.
 அவரைத் தொடர்ந்து நிதான ஆட்டத்தை வெளிப்படுத்திய கெüர் 20 ரன்களில் ஆட்டமிழந்தார். அப்போது அணியின் ஸ்கோர், 15 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 62 ரன்களாக இருந்தது. பின்னர் பேட் செய்த வீராங்கனைகளில் அதிகபட்சமாக மல்கோத்ரா மட்டும் 18 ரன்கள் சேர்த்தார். மற்ற வீரர்கள் ஒற்றை இலக்க ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினர். 20ஆவது ஓவரின் கடைசி பந்தில் கடைசி விக்கெட்டையும் இழந்து 81 ரன்கள் சேர்த்தது.
 பாகிஸ்தான் தரப்பில் சனா மிர் சிறப்பாக பந்து வீசி 13 ரன்களில் 4 முக்கிய விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
 இந்திய பந்து வீச்சு அபாரம்: 82 ரன்கள் என்ற எளிமையான இலக்குடன் களமிறங்கிய பாகிஸ்தான் அணியினருக்கு சோதனை காத்திருந்தது. இந்திய வீராங்கனைகளின் கட்டுக்கோப்பான பந்து வீச்சினால் எதிரணியினர் ரன்கள் சேர்க்க சிரமப்பட்டனர். அந்த அணி 4 ரன்கள் எடுத்திருந்தபோது முதல் விக்கெட்டை பறிகொடுத்தது.
 இந்திய அணியின் பந்து வீச்சுக்கு ஈடுகொடுக்க முடியாமல் அந்த அணியினர் ஒருவர் பின் ஒருவராக பெவிலியன் திரும்பிய வண்ணம் இருந்தனர். 
 அதிகபட்சமாக பிஸ்மாஹ் மரூஃப் மட்டும் 18 ரன்கள் சேர்த்தார். 19.1 ஓவர்கள் முடிவில் அந்த அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 63 ரன்கள் மட்டுமே சேர்த்திருந்தது.
 இந்தியத் தரப்பில் அர்ஜனா தாஸ், நாகராஜன் நிரஞ்சனா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.
 ஆட்ட நாயகியாக 25 ரன்கள் எடுத்திருந்த பூனம் ராவத் தேர்வு செய்யப்பட்டார். தொடர் நாயகி விருதை பாகிஸ்தான் வீராங்கனை பிஸ்மாஹ் மரூஃப் தட்டிச் சென்றார்.
 இந்திய அணி குறைவான ரன்கள் எடுத்திருந்தபோதும் பந்து வீச்சாளர்கள் தங்கள் பணியை சிறப்பாகச் செய்து ஆசிய கோப்பையை கைப்பற்றி இந்தியாவுக்குப் பெருமை தேடித் தந்தனர்.

ad

ad