புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

27 நவ., 2012

பட்டதாரிகளின் ஆர்ப்பாட்டங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்து ஜனாதிபதி : ஹக்கீம்
நீதியமைச்சிற்கு புதிதாக சேர்த்துக்கொள்ளப்பட்டுள்ள 195 பட்டதாரிகளுக்கு நியமனக் கடிதங்களை வழங்கும் நிகழ்வு கொழும்பு-12 இல் அமைந்துள்ள இலங்கை சட்டமன்றத்தின் கேட்போர் கூடத்தில்
இன்று திங்கட்கிழமை நடைபெற்ற போதே அமைச்சர் ஹக்கீம் இதனைத் தெரிவித்தார்.
 



அமைச்சர் இது குறித்து மேலும் தெரிவிக்கையில்,

கடந்த காலங்களில் வேலையற்றிருந்த பட்டதாரிகளாகிய நீங்கள் கொழும்பு லிப்டன் சுற்றுவட்டத்திலும், கோட்டை புகையிரத நிலையம் முன்பாகவும், நாட்டின் பல்வேறு பகுதிகளிலுள்ள முக்கிய இடங்களிலும் ஒன்று திரண்டு ஆர்ப்பாட்டங்களை முன்னெடுத்தீர்கள். ஜனாதிபதியின் சரியான வழிகாட்டலின் கீழ் பட்டதாரிகளின் வேலையி
ல்லாத் திண்டாட்டத்திற்கு முற்றுப்புள்ளி வைத்து இப்பொழுது உங்களுக்கு தொழில் வாய்ப்பு வழங்கப்படுகிறது. இதனால் நீங்கள் விரக்தியின் விளிம்பிலிருந்து மீண்டிருக்கின்றீர்கள்.

நீதிஅமைச்சின் கீழ் இயங்கும் நிறுவனங்களிலும், நாடளாவிய ரீதியிலுள்ள நீதிமன்றங்களிலும் கடமையாற்றுவீர்கள். மிகவும் பொறுப்புணர்ச்சியுடன் நீங்கள் கடமையில் ஈடுபட வேண்டும்.

வேலையற்றிருந்த உங்களைப் போன்ற பட்டதாரிகள் அத்தனை பேருக்கும் உரிய தொழில் வாய்ப்புகளை வழங்குவது இலேசான காரியமல்ல. உலக வங்கி, ஆசிய அபிவிருத்தி வங்கி மற்றும் சர்வதேச உதவி வழங்கும் நிறுவனங்கள் என்பவற்றின் வேண்டுகோள்களையும் பொருட்படுத்தாது ஜனாதிபதி திறைசேரிக்கு வழங்கிய ஆலோசனைக்கு அமைவாக உங்களுக்கு இந்த அரிய வாய்ப்பு கிட்டியுள்ளது. எதிர்காலத்தில் இவ்வாறான நியமனங்களை மேற்கொள்ள முடியுமா என்பது கேள்விக்குறியாகுமென அவர் மேலும் தெரிவித்தார். 

இந் நிகழ்வில் நீதியமைச்சின் செயலாளர், மேலதிகச் செயலாளர் மற்றும் அமைச்சின் அதிகாரிகளும் கலந்துகொண்டனர். பட்டதாரிகளுக்கான நியமனக் கடிதங்களை அமைச்சர் ஹக்கீமும், அமைச்சின் செயலாளரும் வழங்கினர்.

ad

ad