புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

20 நவ., 2012

19 எம்.பி.க்களை வைத்துக்கொண்டு மத்திய அரசுக்கு எதிராக நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வருவதா? என்று மம்தா பானர்ஜிக்கு காங்கிரஸ் கண்டனம் தெரிவித்துள்ளது. காங்கிரஸ் பிரமுகரும், மத்திய தகவல் ஒலிபரப்புத்துறை மந்திரியுமான மனீஷ் திவாரி டெல்லியில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.அப்போது அவர் கூறியதாவது
:-

நாட்டில் தற்போது வினோதமான சூழ்நிலை நிலவுகிறது. 19 எம்.பி.க் களை மட்டுமே கொண்டுள்ள ஒரு கட்சி, மத்திய அரசுக்கு எதிராக நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டுவரப் பார்க்கிறது. பாராளுமன்ற வரலாற்றிலேயே முன் எப்போதும் இதுபோல் நடந்தது இல்லை. இந்த தீர்மானத்துக்கு ஆதரவு திரட்டுவதற்காக, எந்த கட்சியை 30 ஆண்டுகளாக எதிர்த்து வந்தாரோ, அந்த கட்சியிடமே ஆதரவு கேட்கும் நிலைக்கு மம்தா பானர்ஜி தள்ளப்பட்டுள்ளார்.

நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வரும் முடிவை மம்தா பானர்ஜி மறுபரிசீலனை செய்ய வேண்டும். 3 மாதங்களுக்கு முன்புவரை, மத்திய அரசில் திரிணாமுல் காங்கிரஸ் இடம்பெற்று இருந்தது என்ற உரிமையில் இக்கோரிக்கையை விடுக்கிறேன். மம்தா பானர்ஜி, தெருமுனை போராட்டக்காரர் என்ற நிலையில் இருந்து அரசியல் மேதையாகவும், நிர்வாகியாகவும் பரிணாமம் பெற வேண்டிய நேரம் இதுவே ஆகும்.

மம்தா பானர்ஜி விரும்பாவிட்டால், அவரது மாநிலத்தில் சில்லறை வர்த்தகத்தில் அன்னிய நேரடி முதலீடு திட்டத்தை அமல்படுத்த தேவையில்லை என்று ஏற்கனவே கூறி இருக்கிறோம். ஆனால், அன்னிய முதலீட்டை அமல்படுத்தி வரும் காஷ்மீர், அரியானா, ஆகிய மாநிலங்களுக்கு எதிராக அவர் 'வீட்டோ' அதிகாரத்தை பயன்படுத்த பார்ப்பது தவறு. அவர் பாராளுமன்றத்தை சுமூகமாக நடத்த வேண்டும். 

ஸ்பெக்ட்ரம் ஏல முறை தோல்வி அடைந்து விட்டது. எனவே, ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் ரூ.1 லட்சத்து 76 ஆயிரம் கோடி இழப்பு ஏற்பட்டதாக தணிக்கை அதிகாரி கூறியது தவறு என்று தெரிந்து கொள்ளலாம். இதுபோல், நிலக்கரி சுரங்க ஒதுக்கீட்டில் ரூ.1 லட்சத்து 86 ஆயிரம் கோடி இழப்பு என்ற மதிப்பீடும் அம்பலப்படுத்தப்படும்.

இவ்வாறு மனீஷ் திவாரி கூறினார்.

ad

ad