புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

17 நவ., 2012

சிராணி விவகாரம்: பொதுநலவாய அரச தலைவர்களின் மாநாட்டை புறக்கணிக்க பல நாடுகள் தீர்மானம்?
பிரதம நீதியரசர் சிராணி பண்டாரநாயக்கவுக்கு எதிராக சமர்ப்பிக்கப்பட்டுள்ள அரசியல் குற்றப் பிரேரணையை அடுத்து அவர் பதவியிலிருந்து நீக்கப்பட்டால், இலங்கையில் நடைபெறவுள்ள 2013 ஆம் ஆண்டுக்கான பொதுநலவாய நாடுகளின் அரச தலைவர்களின்
மாநாட்டை நாடுகள் பலவற்றின் தலைவர்கள் புறக்கணிக்கலாம் எனத் தெரியவருகின்றது.
 

பொதுநலவாய நாடுகளின் அரச தலைவர்களின் மாநாடு அடுத்த ஆண்டு ஹம்பாந்தோட்டையில் நடைபெறவுள்ளது.

குறித்த மாநாடு தொடர்பில் உலகளாவிய ரீதியில் பல சர்ச்சைகள் எழுந்துள்ளன.

இலங்கையில் மனித உரிமைகள் தொடர்பில் முன்னேற்றம் காணப்படாவிடின் தான் இம் மாநாட்டை புறக்கணிக்கப் போவதாக கனேடியப் பிரதமர் ஏற்கனவே அறிவித்துள்ளார்.

மேலும் இங்கிலாந்து பிரதமர் டேவிட் கெமரூனை இம்மாநாட்டில் கலந்துகொள்ளக்கூடாது என அந்நாட்டு அமைச்சர்கள் சிலர் வேண்டுகோள் விடுத்துள்ளனர். இலங்கையில் மோசமான மனித உரிமைகள் இடம்பெற்றமைக்கான ஆதாரங்கள் உள்ளதாகவும் எனவே இம்மாநாட்டை இலங்கையில் நடத்துவது தவறான முடிவு எனவும் பிரித்தானிய அமைச்சர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இந்நிலையில் பிரதம நீதியரசர் சிராணி பண்டாரநாயக்கவுக்கு எதிராக சமர்ப்பிக்கப்பட்டுள்ள அரசியல் குற்றப் பிரேரணையும் சர்வதேச அரங்கில் சிறிது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. சிலவேளை சிராணி பண்டாரநாயக்க தனது பதவியிலிருந்து நீக்கப்பட்டால் பொதுநலவாய நாடுகள் பலவற்றின் தலைவர்கள் மாநாட்டில் கலந்துகொள்ளும் தங்கள் முடிவினை மீள் பரிசீலனை செய்யக்கூடும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.

இதேவேளை அண்மையில் வெளியாகிய ஐ.நா. சபையின் உள்ளக ஆய்வொன்று இலங்கையில் இடம்பெற்ற மோசமான மனித உரிமை மீறல்கள் தொடர்பில் தகவல்களை உள்ளடங்கியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

ad

ad