புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

19 நவ., 2012


தமிழ் எம்பி ஒருவரைக் கிண்டலடித்த ஆளும் கட்சி உறுப்பினர்: குலுங்கிச் சிரித்தது பாராளுமன்றம்
2013ம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட இரண்டாம் வாசிப்பு மீதான இறுதிநாள் விவாதம் நேற்று பாராளுமன்றத்தில் நடைபெற்றபோது தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் யாழ் மாவட்ட எம்பி அப்பாத்துரை விநாயகமூர்த்தி ஆங்கில மொழியில் உரையாற்றினார்.
இதைக் கேட்ட ஆளும் கட்சி உறுப்பினர்கள் கொல் எனச் சிரித்து, யாழ்ப்பாணத்தவராய் இருக்கின்ற நீங்கள் தமிழ் மொழியில் உரையாற்றுங்கள். உங்களது ஆங்கில மொழியிலான உரையை எங்களால் புரிந்துகொள்ளமுடியவில்லை என நக்கலாகக் கூறினர்.
இவர் தனதுரையில் அரசாங்கத்தையும் அமைச்சர்களையும், நாட்டின் பொருளாதார நிலைமைகளையும் குறிப்பிட்டு பேசியவேளை ஆளும் கட்சி எம்பிக்கள் தொடர்ச்சியாக இடையூறுகள் செய்துகொண்டிருந்ததோடு, ஆங்கிலப் புலமை போதும் தமிழில் உரையாற்றுங்கள் எனக் கிண்டலடித்தவண்னம் இருந்துள்ளனர்.
எதனையும் பொருட்படுத்தாது தொடர்ந்து உரையாற்றிக்கொண்டிருந்தார் அப்பாத்துரை விநாயகமூர்த்தி.
அவரின் உரையை இடையூறு செய்ய கங்கணம் கட்டி, ஒரு சந்தர்ப்பத்தில் அப்பாத்துரை விநாயகமூர்த்தியின் கருத்துக்கு எதிர்க்கருத்தை வைத்த விளையாட்டுத்துறை அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே கூறுகையில்,
ஐயா...! நீங்கள் யாழ்ப்பாணத்தவர் தானே. தமிழில் பேச முடியுமல்லவா? அப்படியெனில் ஏன் ஆங்கிலத்தில் உரையாற்றுகிறீர்கள் என கைகொட்டிச் சிரித்தபடி கேட்டவேளையில் மஹிந்தானந்தவின் ஒலிவாங்கி முடக்கப்பட்டது.
பாராளுமன்றின் ஏனைய சில உறுப்பினர்களின் இடையூறுகளையும், கிண்டல்களையும், கேள்விகளையும் செவிசாய்க்காது தனக்கென கொடுக்கப்பட்ட நேரத்தினுள் தன் உரையை முடித்துக்கொண்டார் அப்பாத்துரை விநாயகமூர்த்தி.

ad

ad