புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

6 நவ., 2012

பூகோள கால மீளாய்வு அமர்வில் இலங்கை தொடர்பில் 210 பரிந்துரைகள் சமர்ப்பிப்பு
ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் பூகோள கால மீளாய்வுஅமர்வுகளில் இலங்கை தொடர்பில் 210 பரிந்துரைகள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன.



இந்தியா, ஸ்பெய்ன் மற்றும் பெனின் ஆகிய நாடுகள் இலங்கை தொடர்பில் வரைவு பரிந்துரைகள் அடங்கிய அறிக்கையை இன்று சமர்ப்பித்துள்ளது.
மீளாய்வு கூட்டத்தொடரில் 99 நாடுகள் முன்வைத்த யோசனைகளின் அடிப்படையில், இந்த மூன்று நாடுகளும் இணைந்து 210 பரிந்துரைகள் அடங்கிய தீர்மான அறிக்கையை  சமர்ப்பித்திருந்தன.
அறிக்கையின் 210 பரிந்துரைகளில் 100 பரிந்துரைகளை இலங்கை அரசாங்கம் நிராகரித்துள்ளது.
நிராகரிப்புக்கான காரணத்தினை இலங்கையின் பிரதிநிதிகள் தெளிவுபடுத்தியுள்ளனர்.
இந்தத் தீர்மானத்துக்குப் பதிலளித்து உரையாற்றிய அமைச்சர் மஹிந்த சமரசிங்க, ஐ.நா மனிதஉரிமைகள் ஆணையாளரின் செயலகத்துக்கு இரண்டு வாரங்களுக்குள் இலங்கையின் உறுதிமொழிகள் அனுப்பி வைக்கப்படும் என தெரிவித்துள்ளார்.

ad

ad