புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

6 நவ., 2012

கடற்படையினரிடமிருந்து பொன்னாலை மக்களின் காணிகள், வீடுகள் 22 ஆண்டுகளின் பின்னர் இன்று கையளிப்பு
22ஆண்டுகளுக்கு பின்னர் பொன்னாலை மக்களிடம் அவர்களது காணிகளை சிறிலங்காக் கடற்படையினர் இன்று உத்தியோகப் பூர்வமாகக் கையளித்துள்ளனர்.


போர் நடவடிக்கைகள் தீவிரமடைந்திருந்த கடந்த 1990ம் ஆண்டு பொன்னாலை தொடக்கம் மாதகல், கீரிமலை, வலி. வடக்கு காங்கேசன்துறை வரையான கடற்கரைப் பகுதிகளை சிறிலங்காப் படையினர் கைப்பற்றியிருந்தனர். இதனையடுத்து இப் பகுதிகள் உயர்பாதுகாப்பு வலயங்களாக அறிவிக்கப்பட்டு சிறிலங்காக் கடற்படையினரால் ஆண்டு அனுபவிக்கப்பட்டு வந்தது.

யுத்தம் முடிவடைந்ததன் பின்னர் உயர் பாதுகாப்பு வலயங்கள் சிறிது சிறிதாக விடுவிக்கப்பட்டு வரும் நிலையில், கடந்த வாரம் பொன்னாலை, மாதகல் மேற்கு ஆகிய பிரிவுகளில் உள்ள பாதுகாப்பு வலயங்களில் குடியமர கடற்படையினர் அனுமதி வழங்கியிருந்தனர். அதனையடுத்து, இன்று பொன்னாலை வரதராஜபெருமாள் கோயிலைச் சூழவுள்ள பகுதியில் மக்களின் வீடுகளை அவர்களிடம் கையளிக்கும் நிகழ்வு இன்று காலை இடம்பெற்றது.

இதில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, சிறிலங்காக் கடற்படையின் அதிகாரிகள், அரச அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டு மக்களிடம் வீடுகளைக் கையளித்துள்ளனர்.

நீண்ட காலமாக மக்களின் வீடுகளை ஆண்டுவந்த சிறிலங்காக் கடற்படையினர் அவ் வீட்டில் மேலதிகமாக தாங்கள் கட்டிய கட்டிடங்கள் மற்றும் ஏனைய பகுதிகளையும் இடித்து அகற்றிச் சென்றுள்ளனர்.

அவர்களின் இச் செயல் மக்களிடையே விசனத்தை ஏற்படுத்தியுள்ளது. இவ்வளவு காலமும் தமது வீட்டை ஆக்கிரமித்து இருந்த கடற்படையினர் வீட்டில் மேற்கொண்ட அபிவிருத்திகளை அகற்றாது சென்றிருக்கலாம் என மக்கள் தமது ஆதங்கத்தை வெளிப்படுத்தினர்.

ஆனால் கடற்படையினரோ, தாம் பயங்கரவாதிகளிடமிருந்து, நாட்டைப் பாதுகாத்து தந்துள்ளோம். அதுவே மக்களுக்கு நாங்கள் அளித்த பெரும் பரிசாகும். நாம் நமது இருப்பிடங்களை விட்டுச் செல்கையில் எம்மால் மேற்கொள்ளப்பட்ட மேலதிக அபிவிருத்திகள் யாவையையும் அகற்றிவிட்டுச் செல்வதுதான் வழமை எனத் தெரிவித்துள்ளனர்.

ad

ad