புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

13 நவ., 2012


திட்டமிட்டு கொல்லப்பட்டார்களா 27 பேர்? - வெலிக்கடை சிறைக் கொடூரம்! அமைச்சர் ஒருவரும் உடந்தையாம்
வெலிக்கடச் சிறை மீண்டும் ரத்தத்தால் நனைந்துள்ளது! குட்டிமணி, ஜெகன், தங்கதுரை உள்ளிட்ட 53 ஈழத் தமிழ் கைதிகள், 1983 ஜூலையில் வெலிக்கட சிறைச்சாலையில் கொடூரமாகக் கொல்லப்பட்ட கறுப்புக் கலவரத்துக்குப் பிறகு, கடந்த 9-ம் தேதி மீண்டும் ஒரு கோரச் சம்பவம்.
இலங்கை அதிரடிப் படையினராலும் இராணுவத்தினராலும் நிகழ்த்தப்பட்ட கொடூரத் தாக்குதலில் 27 கைதிகளின் உயிர் பறிபோனது. 50-க்கும் மேற்பட்ட அப்பாவிக் கைதிகள் காயம் அடைந்தனர்.
கொழும்பில் இருக்கும் பத்திரிகையாளர்களிடம் பேசியபோது,
நகரத்தின் மையப் பகுதியில் அமைந்​திருக்கும் இலங்கையின் மிகப் பெரிய வெலிக்கடை சிறையில் மொத்தம் உள்ள கைதிகளின் எண்ணிக்கை 3,894. இவர்களில் போதைப் பொருட்கள் கடத்தல் வழக்குகளில் கைதானவர்களும், நிழல் உலக தாதாக்​களுமே அதிகம்.
2009-ம் ஆண்டு நடந்த போரில் கைதான முன்னாள் விடுதலைப்புலிகளும் பல்வேறு வழக்குகளில் கைதான நூற்றுக்கணக்கான தமிழ்க் கைதிகளும் இந்தியா உள்ளிட்ட பல நாடுகளின் கைதிகளும் இந்தச் சிறையில் இருக்கிறார்கள்.
நிழல் உலக தாதாக்களும் ரவுடிகளும் இருப்பதால், வெலிக்கடை சிறையில் அடிதடி, கத்திக்குத்து, துப்பாக்கிச் சூடு போன்றவை அவ்வப்போது அரங்கேறும். போதை வஸ்துகள், செல்போன், லேப்டாப் என சகலமும் உள்ளே தாராளமாகப் புழங்கும். அதனைக் கண்டுபிடிக்க எப்போதாவது சிறப்பு அதிரடிப் படையினர் திடீர் விசிட் அடிப்​பார்கள்.

கடந்த 9-ம் தேதி மதியம் 300-க்கும் மேற்பட்ட இலங்கை அதிரடிப் படையினர் சிறை வளாகத்தில் நுழைந்து, சிலரை அழைத்துச் சென்று கொடூரமாகத் தாக்கி விசாரித்தார்களாம்.
அதனால் ஆத்திரம் அடைந்த மற்ற கைதிகள் அதிரடிப் படையினரைக் கற்களால் தாக்கினர். இதில் அதிரடிப் படையினர் பலர் காயமடைய, கண்ணீர் புகைக் குண்டுகளையும் நீரையும் பாய்ச்சி கைதிகளை அடக்க முயன்றனர்.
ஒரு கட்டத்தில் மோதல் முற்றி, சிறை வளாகத்தில் இருந்த ஆயுதக் கிடங்கில் இருந்த துப்பாக்கிகளைக் கைப்பற்றி பொலிஸாரை நோக்கி கைதிகள் சுட்டனர்.
இன்னும் சிலர் சிறைக் கட்டடங்களின் மீது ஏறி, கையில் கிடைத்ததைக்கொண்டு தாக்கினர்.
பொலிஸுக்கும் சிறைக் கைதிகளுக்கும் இடையே நடந்த கலவரத்தைப் பயன்படுத்தி, ஆறு முக்கியமான நிழல் உலக தாதாக்கள் தப்பி ஓடினர்.
விஷயம் எல்லை மீறிப் போகவே, உடனடியாக 2,000-க்கும் மேற்பட்ட இராணுவத்தினர் வரவழைக்கப்​பட்டு, நள்ளிரவு 1 மணி வரை துப்பாக்கிச் சூடு நிகழ்த்தப்பட்டது.
இதில் 16-க்கும் மேற்பட்டவர்கள் இறந்து விட்டதாகவும், 30-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்ததாகவும் இலங்கை சிறை மற்றும் புனர்வாழ்வுத் துறை அமைச்சர் சந்திரசிறீ கஜிதீர தெரிவித்தார் என்றார்கள்.
கொழும்பின் மூத்த தமிழ் பத்திரிகையாளர் ஒருவர், வெலிக்கடை சம்பவம் எதிர்பாராத விதமாக நடந்து இருந்தாலும், ஈழத் தமிழ்க் கைதிகளை பலிக்கடா ஆக்க சிறப்பு அதிரடிப் படையினர் திட்டம் போட்டார்கள்.
ஆனால், தமிழர்கள் விழிப்புடன் இந்தக் கலவரத்தில் பங்கெடுக்காமல் அறைக்குள்ளே இருந்துவிட்டார்கள். அதனால் விடுதலைப்புலிகள் இந்தக் கலவரத்தைத் தூண்டினர் என்று கதை கட்ட வாய்ப்பு இல்லாமல் போய்விட்டது.
வெள்ளிக்கிழமை நள்ளிரவு 2.30 மணிக்கு 16 பேர் இற‌ந்தார்கள் என்று சொன்ன பொலிஸ் தரப்பு, இப்போது 27 பேர் இறந்ததாகச் சொல்கிறது. இந்த எண்ணிக்கை இன்னும் உயரும் அபாயமும் இருப்பதாகச் சொல்கிறார்கள்.
இந்த எண்ணிக்கை கூடுவதற்கு என்ன காரணம் என்று விசாரித்தால், போதைப் பொருள் கடத்தல் கும்பல் மற்றும் நிழல் உலக தாதா கும்பல் பங்கெடுத்த இந்தக் கலவரத்தில் தமிழர்களையும் சிங்கள அரசியல் கைதிகளையும் களையெடுக்க பொலிஸ் திட்டம் போட்டதாம். ஆனால் அது முடியவில்லை.
அதனால், நிலைமை​யைக் கட்டுக்குள் கொண்டுவந்த பிறகு, நள்ளிரவு 1 மணிக்கு சிறப்பு அதிரடிப் படையினரும் சிங்கள அமைச்சர் ஒருவரும் சிறைக்கு வந்தார்கள். சில பெயர்கள் அடங்கிய லிஸ்ட்டை கையில் வைத்துக்கொண்டு அவர்களைத் தனி இடத்துக்கு அழைத்துச் சென்று கொன்றதாகச் சொல்கிறார்கள்.
அவர்கள் சிங்களவர்களாக இருந்தாலும், அரசுக்கும் சில சிங்கள அமைச்சர்களின் சட்ட விரோதத் தொழில்களுக்கும் இடைஞ்சலாக இருப்பவர்களாம். அதனால்தான் சாவுகளின் எண்ணிக்கை உயர்ந்து இருக்கிறது என்று  அதிர்ச்சி கொடுத்தார்.
வெலிக்கடை சிறைக் கலவரத்தில் தமிழர்களுக்கு ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டதா? என விசாரித்தோம்.
வெலிக்கடை சிறையில் ஈழத் தமிழ் கைதிகள் பி1 பிளாக்​கிலும் இந்தியா உள்ளிட்ட வெளிநாட்டுக் கைதிகள் சி2 பிளாக்கிலும் இருந்ததால் அவர்களுக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படவில்லை.
இதுவரை வெலிக்கடை சிறைக் கலவரம் குறித்து முழுமையான தகவலை சிறை நிர்வாகமும் அமைச்சகமும் அறிவிக்க‌வில்லை.
ஈழத் தமிழர்கள் உட்பட தமிழகத்தைச் சேர்ந்த ஐந்து மீனவர்களும் பத்திரமாக இருப்பதாகவே தகவல்கள் வருகின்றன என்றனர்.
ஜூனியர் விகடன்!

ad

ad