புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

7 நவ., 2012



முதல் தேர்தல் முடிவில் ஒபாமா 28 - ரொம்னி 14 

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலின் முதலாவது முடிவில் ஜனநாயகக் கட்சியின் பராக் ஒபாமா 28 குடியரசு கட்சி வேட்பாளர் மிட் ரொம்னி   14 வாக்குகளை பெற்று  இருந்தனர்.
அமெரிக்க ஜனாதிபதி தேர்தலின் வாக்குப் பதிவுகள் நேற்று நாடு பூராவும் விறுவிறுப்பாக இடம் பெற்றது. பலர் நீண்ட வரிசையில் நின்று வாக்களித்தனர். எனினும்
நியூ ஹம்ஷயர் மாநிலத்தின் டிக்ஸ்வில்லே நொட்ச் கிராமத்திலேயே முதலாவது வாக்குச் சாவடி திறக்கப்பட்டது. உள்நாட்டு நேரப்படி நேற்று நள்ளிரவுக்கு பின் திறக்கப்பட்ட வாக்குச் சாவடியில் மொத்தமுள்ள 10 வாக்குகளும் 43 வினாடிகளுக்குள் போடப்பட்டன.
இதனைத் தொடர்ந்து உடனடியாக வாக்குகள் எண்ணப்பட்டன. அதில் ஒபாமாவுக்கு 5 வாக்குகள் கிடைத்ததோடு மிட்ரொம்னிக்கும் 5 வாக்குகள் பதிவானது. இந்த தேர்தல் முடிவு இம்முறை ஜனாதிபதி தேர்தலில் கடும் போட்டி நிலவுவதை வெளிக்காட்டுவதாக அமைந்தது.
டிக்ஸ்வில்லே நொட்ச் வடக்கு நியூ ஹம்ஷயரில் உள்ளது. கடந்த 50 ஆண்டுகளில் இங்கு தான் முதல் வாக்கு பதிவு ஆரம்பிக்கப்படும். வாக்குப் பதிவு முடிந்த சில நிமிடங்களில் வாக்குகள் எண்ணப்பட்டுவிடும். கிட்டத்தட்ட ஜனாதிபதி தேர்தல் முடிவின் முன்னோட்டமாகவே இது அமையும்.
எனினும் முதல் வாக்குப் பதிவு இடம் பெற்ற மற்றொரு கிராமமான ஹார்ட்ஸ் லொகோஷனில் ஒபாமா முன்னிலை பெற்றார். இங்கு மொத்தம் 33 வாக்குகள் தான் உள்ளன. 6 நிமிடங்களில் வாக்கு பதிவு முடிந்து விட்டது. எண்ணிப்பார்த்தபோது ஒபாமா 23 வாக்குகளை பெற்றிருந்தார். ரொம்னிக்கு 9 வாக்குகள் தான் கிடைத்தன. ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் சுதந்திர கட்சியின் வேட்பாளர் கெரி ஜோன்சன் ஒரு வாக்கை பெற்றார்.
கடந்த 1948 ஆம் ஆண்டிலிருந்து இந்த இரு கிராமங்களிலும் தான் முதல் வாக்குப் பதிவு நடந்து வருகிறது. இந்த இரு கிராமங்களையும் சேர்த்து ஒட்டு மொத்தமாக பார்த்தால் பராக் ஒபாமா 28 வாக்குகளை வென்றதோடு மிட்ரொம்னிக்கு 14 வாக்குகள் கிடைத்தன.
எனினும் அண்மையில் தாக்கிய சான்டி புயலால் கடுமையாக பாதிக்கப்பட்ட நியூயோர்க் மற்றும் நியூஜேர்சி மாநிலங்களில் வாக்கு பதிவில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. நியூயோர்க்கில் பல பகுதிகளிலும் வாக்குச் சாவடிகள் சேதமடைந்துள்ளதோடு மின் விநியோகமும் துண்டிக்கப்பட்டுள்ளது. அதேபோன்று நியூஜேர்சியிலும் லட்சக்கணக்கானோர் வாக்களிப்பதற்கு சிக்கலை எதிர்நோக்கி வருகின்றனர்.
இதனால் வாக்காளர்கள் மின்னஞ்சல் மற்றும் தொலைகல் மூலம் தமது வாக்குகளை பதிவு செய்யவேண்டி ஏற்பட்டுள்ளது. இதன்படி வாக்காளர்கள் தமது வாக்கு பதிவு அட்டையை மின்னஞ்சல்கள் அல்லது தொலை நகல் மூலம் பிராந்திய அலுவலருக்கு அனுப்ப வேண்டும். இதனைத் தொடர்ந்து அது அங்கீகரிக்கப்பட்டு அனுப்பப்பட்டதைத் தொடர்ந்து தமது வாக்கை பதிவு செய்ய வேண்டும்.
இவ்வாறான வாக்குப் பதிவு முறை இராணுவத்தினருக்கு வாக்களிக்கவே பயன்படுகிறது. இது முதல் முறையாக சாதாரண குடிமக்களுக்கு பயன்படுத்தப்பட்டுள்ளது. இதில் வாக்குப் பதிவுகளுக்கு மேலதிக தினம் ஒதுக்கப்படவும் வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. அவ்வாறு ஏற்பட்டால் ஜனாதிபதி தேர்தலின் இறுதி முடிவு வெளிவருவதில் தாமதம் ஏற்படும்.

ad

ad