புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

15 நவ., 2012


பரிதி கொலைச் சந்தேக நபர்களின் பெயர் எந்நேரமும் வெளியாகலாம் !புலிகளி தளபதி கேணல் பரிதி அவர்களின் கொலையுடன் சம்பந்தப்பட்டதாக சந்தேகிக்கப்படும் 2 நபர்களைப் பொலிசார் கைதுசெய்துள்ளமை யாவரும் அறிந்ததே. இவர்கள் இருவர் மீதும் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து
இவர்கள் இருவரும் நீதிமன்றம் முன் நிறுத்தப்பட்டுள்ளார்கள். இருப்பினும் இவர்களின் பெயர் விபரங்களை வெளியிட பிரெஞ்சுப் பொலிசார் மறுத்து வருகின்றனர். இதேவேளை இன்றைய தினம் இல்லையேல் நாளை இவர்களது பெயர் விபரங்கள் வெளியாக வாய்ப்பு உள்ளதாக பிரான்சில் இருந்து தகவல்கள் வெளியாகியுள்ளது.

குறிப்பிட்ட 2 இளைஞர்களும் இலங்கையர்கள் என்ற விபரத்தை மட்டுமே பிரெஞ்சுப் பொலிசார் வெளியிட்டுள்ள நிலையில், இவர்கள் இருவரும் நீதிமன்றம் சென்றதால், அன் நீதிமன்றம் ஊடாக இவர்களது பெயர் வெளியாக வாய்ப்பு இருப்பதாக மேலும் அறியப்படுகிறது. சிங்கள ஊடகங்களு, அவர்களோடு சேர்ந்து இயங்கும் அடிவருடிகளும் புலிகளுக்கு இடையே பிளவு ஏற்பட்டுள்ளதாகவும், இதன் அங்கமாகவே இக் கொலை இடம்பெற்றதாகவும் தெரிவித்து வருகிறது. இதனைச் சில தமிழ் ஊடகங்களும் பிரசுரித்து வருவது கண்டிக்கப்படவேண்டிய விடையமாக உள்ளது. கேணல் பரிதி அவர்களின் கொலைக்கும் இலங்கை அரசுக்கும் நேரடித் தொடர்பு இல்லை என்றால், சிங்கள ஊடகங்கள் ஏன் இவ்வாறு ஒரு கட்டுக்கதையை பிரசுரிக்கவேண்டும் என்ற கேள்விகளும் எழுந்துள்ளது.

பிரெஞ்சுப் பொலிசார் இலங்கைக்கும் இக் கொலைக்கும் என்ன தொடர்பு இருக்கிறது என்ற கோணத்திலேயே தமது விசாரணைகளை நடத்திவருவதாக பிரான்சில் இருந்து வெளியாகும் பிரபல வார இதழ் செய்திவெளியிட்டுள்ளதும் குறிப்பிடத்தக்க விடையமாகும்.

ad

ad