புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

16 நவ., 2012

2ஜி ஸ்பெக்ட்ரம் ஏலம் தோல்வி அடைந்ததற்கு சி.ஏ.ஜி.தான் காரணம்: கபில் சிபல் குற்றச்சாட்டு
சமீபத்தில் நடைபெற்ற 2ஜி ஸ்பெக்ட்ரம் ஏலத்தில் அரசுக்கு ரூ.40 ஆயிரம் கோடி வரை வருவாய் கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் 2 நாட்கள் நடந்த இந்த ஏலத்தில் ரூ.9407 கோடிக்கு மட்டுமே அலைக்கற்றை ஏலம் போனது. ஏற்கனவே
நடந்த ஏலத்தில் ரூ.1.76 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டதாக சி.ஏ.ஜி. அறிக்கை வெளியிட்டது. அப்படியென்றால் இந்த முறை அடிப்படை விலையை விட குறைவாக ஏலம் போனது ஏன்? என்பது உள்ளிட்ட பல்வேறு கேள்விகள் எழுந்துள்ளன. 

சி.ஏ.ஜி. மதிப்பீடு செய்து வெளியிட்ட அறிக்கையை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது. இந்நிலையில் 2ஜி ஸ்பெக்ட்ரம் ஏலம் குறித்து மத்திய நிதித்துறை மந்திரி ப.சிதம்பரம், தொலைத் தொடர்புத்துறை மந்திரி கபில் சிபல் ஆகியோர் இன்று விளக்கம் அளித்தனர். அப்போது கபில் சிபல் கூறியதாவது:- 

2ஜி ஸ்பெக்ட்ரம் ஏலத்தில் போதிய வரவேற்பு இல்லாததற்கு சி.ஏ.ஜி.யே காரணம். 2ஜி முறைகேடு தொடர்பான சி.ஏ.ஜி. அறிக்கையை பரபரப்பாக்கியதால் தொலைத்தொடர்புத்துறைக்கு சரிவு ஏற்பட்டுள்ளது. தங்க முட்டையிடும் வாத்தாக இருந்த தொலைத்தொடர்புத்துறை தற்போது சிதைக்கப்பட்டுள்ளது. உச்சநீதிமன்ற உத்தரவுப்படிதான் தற்போது 2ஜி ஸ்பெக்ட்ரம் ஏலம் விடப்பட்டுள்ளது. 

கொள்கை முடிவுகளை அரசுதான் எடுக்க வேண்டும். கொள்கையில் தவறு ஏற்பட்டால் மட்டுமே குறுக்கிட வேண்டும். இழப்பீடு குறித்து தவறான குற்றச்சாட்டு கூறப்பட்டுள்ளது. 

இவ்வாறு அவர் கூறினார். 

சிதம்பரம் கூறுகையில், ‘2ஜி முறைகேட்டால் ரூ.1.76 லேட்சம் கோடி இழப்பு என்று கூறுவது தவறான கருத்து. 2ஜி ஏலம் தோல்வியை நாங்கள் கொண்டாடவில்லை. சர்வதேச பொருளாதார நிலைமை மோசமாக இருக்கிறது. இந்தியாவிலும் அந்த நிலைமை வந்துவிடக்கூடாது என்பதற்காக அதை சரிசெய்யும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அடுத்த ஆண்டுக்குள் சரிசெய்வோம். நடப்பு ஆண்டில் பொருளாதார சூழ்நிலை மேம்படும். 

பாராளுமன்ற மழைக்கால கூட்டம் சரியாக நடைபெறவில்லை. குளிர்கால கூட்டத்தை சுமூகமாக நடத்த எதிர்க்கட்சிகள் ஒத்துழைக்க வேணடும். அன்னிய நேரடி முதலீட்டுக்கு அனுமதி அளித்தது தொடர்பாக பாராளுமன்றத்தில் எந்த விதியின் கீழ் விவாதிப்பது என தெரியவில்லை’ என்றார்.

ad

ad