புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

16 நவ., 2012

இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்டில் வலுவான நிலையில் இந்தியா
இந்திய- இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான முதலாவது டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி 4 விக்கெட்டுக்களை இழந்து 323 ஓட்டங்களை பெற்று வலுவான நிலையில் உள்ளது.
இந்தியா - இங்கிலாந்து அணிகள் மோதும் முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி இன்று அகமதாபாத்தில் ஆரம்பமாகியது. இம் முறை டெஸ்ட் அணியில் சுமார் ஒன்றரை ஆண்டுகளுக்கு பிறகு இடம்பெற்ற ஹர்பஜன்சிங்குக்கு 11 பேர் கொண்ட அணியில் வாய்ப்பளிக்கப்படவில்லை. இங்கிலாந்து அணியில் காயம் காரணமாக முன்னணி வேகப்பந்து வீச்சாளரான ஸ்டீவன்பின் இடம்பெறவில்லை. அத்துடன் தொடக்க ஆட்டக்காரர் கம்டனுக்கு இது முதலாவது டெஸ்ட் போட்டியாகும். 
 

நாணயச் சுழற்சியில் வெற்றிபெற்ற இந்திய அணித் தலைவர் டோனி முதலில் துடுப்பாட்டத்தை தெரிவு செய்தார். அந்தவகையில் இந்திய அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களாக ஷேவாக்கும் கம்பீரும் களம் புகுந்தனர்.

இரண்டு ஆண்டுகளுக்கு பின்னர் ஆரம்பத்துடுப்பாட்ட ஜோடி இம்முறை சிறப்பாக செயல்பட்டு நல்ல ஆரம்பத்தினை அமைத்தது. ஷேவாக் அதிரடியாக ஆடி ஓட்டங்களை குவிக்க மறுமுனையில் ஆடிய கம்பீர் மெதுவாக ஓட்டங்களைப் பெற இந்திய அணி நிதானமாக ஓட்டங்களை குவித்தது.

மதிய உணவு இடைவேளையின் போது இந்திய அணி 28 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 120 ஓட்டங்களை எடுத்திருந்தது. ஷேவாக் 66 பந்துகளில் 12 பவுண்டரி, ஒரு சிக்சருடன் 79 ஓட்டங்களையும் கம்பீர் 103 பந்துகளில் 3 பவுண்டரி உள்ளடங்கலாக 37 ஓட்டங்களை எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தனர். மதிய உணவு இடைவேளைக்கு பிறகு ஆட்டம் தொடங்கிய போது 2ஆவது ஓவரில் ஆரம்பத்துடுப்பாட்ட வீரர்களின் இணைப்பு பிரிக்கப்பட்டது.

கம்பீர் 45 ஓட்டங்களை எடுத்திருந்தபோது சுவானின் பந்தில் போல்டாகி ஆட்டமிழந்தார். இந்நிலையில் இந்திய அணியின் ஓட்ட எண்ணிக்iகை 134 ஆக இருந்தது.

ஷேவாக் தொடர்ந்து அதிரடியாக ஆடி சதம் பெற்றார். இவர் 90 பந்துகளில் 15 பவுண்டரி, ஒரு சிக்சருடன் 100 ஓட்டங்களை பெற்றார். 99ஆவது டெஸ்டில் விளையாடும் ஷேவாக்குக்கு இது 23ஆவது சதமாகும். 2 ஆண்டு இடைவேளைக்கு பிறகு ஷேவாக் சதம் அடித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. கடைசியாக 2010ஆம் ஆண்டு இம் மைதானத்தில் நியூசிலாந்துக்கு எதிராக 173 ஓட்டங்களை எடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

மறுமுனையில் சிறப்பாக விளையாடிய புஜாராவும் தன் பங்கிற்கு அரைச் சதத்தை பூர்த்தி செய்தார். இந் நிலையில், 117 ஓட்டங்களை எடுத்த நிலையில் ஸ்வானின் பந்தில் விக்கெட்டை பறிகொடுத்து வெளியேறினார் சேவாக். இவருடைய அதிரடியில் 15 பவுண்டரிகளும் ஒரு சிக்சரும் அடங்கும்.

அவரைத் தொடர்ந்து மாஸ்டர் பேட்ஸ்மன் டெண்டுல்கர்,விராட் கோலி ஆகியோர் குறைந்த ஓட்ட எண்ணிக்கையுடன் ஆட்டமிழக்க இந்திய அணி முதல் நாள் ஆட்டநேர முடிவில் 4 விக்கெட்டுக்களை இழந்து 323 ஓட்டங்களை எடுத்தது. இங்கிலாந்து அணி சார்பாக ஸ்வான் சிறப்பாக பந்து வீசி 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார். புஜாரா 98 மற்றும் யுவராஜ் 24 ஆகியோர் களத்திலுள்ளனர்.

ad

ad