புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

14 நவ., 2012

விசேச செய்தி 
திடு க்கிடும் தகவல்கள் ,பாதாளக்குடு கோஸ்டியின் நன்கு சிங்கள கைதிகளை கொல்லவே  இந்த  சதி நாடகம் பலி ஆனவர்களோ  30 

4 கைதிகளை தேடிய அதிரடிப்படையினர் கைவிலங்கிட்டு அவர்களை சுட்டுக்கொன்றனர்! - வெலிக்கடைச் சம்பவம் பற்றி சிறை அதிகாரி வெளியிடும் திடுக்கிடும் தகவல்!!

வெலிக்கடைச் சிறைச்சாலைக்குள் ஆயுதபாணிகளாக வந்த விஷேட அதிரடிப்படையினர் நான்கு கைதிகளை தனியாக அழைத்து அவர்களுக்கக் கைவிலங்குகளைப் பொருத்திய பின்னர் கொடூரமான முறையில் அவர்களைச் சுட்டுக்கொண்றார்கள் என்ற திடுக்கிடும் தகவலை சிறைச்சாலை அதிகாரி

ஒருவர் தெரிவித்திருக்கின்றார். இது முன்கூட்டியே திட்டமிட்ட ஒரு கொரக்கொலை எனவும் அவர் குற்றஞ்சாட்டியிருக்கின்றார்.
சிறைச்சாலையில் இடம்பெற்ற சம்பவம் தொடர்பில் சிறைச்சாலை ஆணையாளருக்கு அனுப்பிவைத்துள்ள கடிதம் ஒன்றிலேயே இது தொடர்பான தகவல்கள் சிறைச்சாலை அதிகாரி ஒருவரால் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது. இந்தக் கடிதத்தின் விபரங்கள் சிங்கள இணையத்தளம் ஒன்றின் மூலம் இப்போது சகிந்துள்ளது.

விஷேட அதிரடிப்படையினர் இந்தக் கொலைகளை நடத்தும் நோக்கத்துடன் சிறைச்சாலைக்குள் வந்த வேளையிலிருந்து சிறைச்சாலை அதிகாரிகளுடன் முரண்பட்டுக்கொண்டிருந்தார்கள். அதிரடிப்படையினர் சிறைச்சாலை அதிகாரிகளையும் சோதனையிட்டார்கள். குறிப்பாக அதிரடிப்படையின் தளபதி பிரதிப் பொலிஸ் மா அதிபர் ரணவன்ன, மற்றும் சில்வெஸ்ட்டர் ஆகியோர் சிறை அதிகாரிகளுடன் கடுமையாக முரண்பட்டார்கள்.

எல் வார்ட் பகுதியில் தடுத்துவைக்கப்பட்டிருக்கும் நான்கு கைதிகளை தம்மிடம் ஒப்படைக்குமாறு அதிரடிப்படையினர் சிறைச்சாலை அதிகாரிகளை நிர்ப்பந்தித்தார்கள். குறிப்பிட்ட நான்கு சிங்களக் கைதிகளம் விசாரணைக் கைதிகளே தவிர தண்டனை விதிக்கப்பட்ட கைதிகளல்ல. அவர்களுடைய விபரம் வருமாறு: 1. பாதாள குடு எனப்படும் விஜய றோஹண, 2. மஞ்சு சிறி ஹர்ஷா எனப்படும் ஹர்ஷா சி மணிக்கீர்த்தி, 3. நிர்மலா அத்தப்பத்து, 4. கழு துஷாரா எனப்படும் துஷாரா சந்திர.

இந்தக் கைதிகளை தேடிக் கண்டுபிடித்த அதிரடிப்படையினர் அவர்களுக்கு கைவிலங்ககளைப் பொருத்தினார்கள். கைவிலங்கு பொருத்தப்பட்ட நிலையில் இவர்களைக் கொண்டு செல்வதற்கு அதிரடிப்படையினர் முற்பட்ட போது சிறைச்சாலை அதிகாரிகள் அதனைத் தடுக்க முற்பட்ட போது இரு தரப்பினருக்கும் இடையில் இழுபறிநிலை ஏற்பட்டது.
இதன்போது சிறை அதிகாரிகள் அதிரடிப்படையினரால் கடுமையாகத் தாக்கப்பட்டார்கள். அதிகாரிகளுக்கு ஆதரவாக பேசிய கைதி ஒருவர் துப்பாக்கியால் கடுமையாகத் தாக்கப்பட்டார். குறிப்பிட்ட கைதி அதிரடிப்படையினரால் தாக்கப்பட்டு விழுந்தபோது சுட்டுக்கொல்லப்பட்டார்.

இதேவேளையில் மேலே குறிப்பிட்ட நான்கு கைதிகளும் எந்தவிதமான காரணமும் கூறப்படாமல் சுட்டுக்கொல்லப்பட்டனர். அவர்கள் மீது துப்பாக்கிக் குண்டுகளை சரமாரியாகப் பொழிந்த அதிரடிப் படையினர் கொடூரமாக அவர்களைக் கொன்றார்கள். நான்கு கைதிகளும் அந்த இடத்திலேயே துடிதுடித்து மரணமடைந்தனர்.
கைதிகளின் முன்பாக இடம்பெற்ற இந்த இரத்தத்தை உறையவைக்கும் சம்பவத்தினால் ஆத்திரமடைந்த கைதிகள் உயிரைப் பணயம் வைத்து அதிரடிப்படையினரைத் தாக்கத் தொடங்கினார்கள். அதிரடிப்படையினரின் ஆயுதங்களையும் அவர்கள் பறித் தெடுத்து அவற்றைப் பயன்படுத்தி தாக்கத் தொடங்கினார்கள். இந்தச் சந்தர்ப்பத்தின் போதுதான் அதிரடிப்படையின் தளபதி படுகாயமடைந்தார்.

இவ்வாறு நான்கு கைதிகளும் கொல்லப்பட்டதையடுத்தே சிறைச்சாலைக் கலவரம் தீவிரமடைந்தது எனவும் இந்தக் கடிதத்தில் குறிப்பிட்ட அதிகாரி தெரிவித்திருக்கின்றார்.

இதேவேளையில் சிறைச்சாலை சம்பவம் இடம்பெறுவதற்கு முன்னதாக காலையில் அதிரடிப்படையின் தளபதி ரணவன்ன, பிரதிப் பொலிஸ் மா அதிபர் அநுரா சேனாநாயக்க மற்றும் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோதாபாய ராஜபக்‌ஷ ஆகியோர் பங்கு கொண்ட இரகசியக் கூட்டம் ஒன்று இடம்பெற்றதாகவும், சிறைச்சாலைத் தாக்குதலுக்கான திட்டம் அதன்போதே மேற்கொள்ளப்பட்டதாகவும் குறிப்பிட்ட சிங்கள இணையத்தளம் மேலும் தெரிவித்துள்ளது.

ad

ad