புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

17 நவ., 2012


41 இலட்சம் மாணவர்களுக்கு டிசம்பர் 6ஆம் திகதி புதிய பாடப்புத்தகங்கள் விநியோகம்

41 இலட்சம் மாணவர்களுக்கு பாடப்புத்தகங்களை வழங்கும் உத்தியோகபூர்வ நிகழ்வு எதிர்வரும் டிசம்பர் மாதம் 06 ஆம் திகதி கண்டி தர்மராஜ கல்லூரியில் நடைபெறுமென கல்வி வெளியீட்டுத் திணைக்கள ஆணையாளர் தெரிவித்துள்ளார்.


இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,

2013 ஆம் கல்வியாண்டிற்காக இம்முறை 37 மில்லியன் பாடப் புத்தகங்கள் அச்சிடப்பட்டுள்ளதுடன் 404 புதிய பாடப்புத்தகங்களும் அச்சிடப்பட்டுள்ளன. இப் பாடப் புத்தகங்களை அச்சிடுவதற்கு அரசாங்கத்திற்கு 2400 மில்லியன் ரூபா செலவாகியுள்ளது.

மேலும் 437 வகையான புத்தகங்கள் விநியோகிக்கப்படுவதுடன் 23 வகையான நூல்கள் ஏற்கனவே அச்சிடப்பட்டுள்ளன.

இதேவேளை, 41 இலட்சம் மாணவர்களுக்கு 370 இலட்சம் பாடப் புத்தகங்களை விநியோகிக்க வேண்டியுள்ளது. எனவே, சகல மாணவர்களுக்கும் புதிய பாடப் புத்தகங்களை வழங்குவது அரசின் கொள்கையெனவும் ஆணையாளர் மேலும் தெரிவித்தார்.

ad

ad