புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

1 நவ., 2012


முன்னாள் விடுதலைப்புலிப் போராளிகள் 48 பேர் இன்று விடுவிப்பு
இறுதிக்கட்ட யுத்தத்தின் போது பாதுகாப்பு தரப்பினரிடம் சரணடைந்த முன்னாள் போராளிகளில் 48பேர் முழுமையான புனர்வாழ்வுக்குப் பின் இன்று புதன்கிழமை உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர் என்று புனர்வாழ்வு ஆணையாளர் பிரிகேடியர் தர்ஷன ஹெட்டியாரச்சி தெரிவித்தார்.
இவ்வாறு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டவர்களில் 7 பெண்கள்
உள்ளடங்குவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இந்நிலையில், 782 முன்னாள் போராளிகள் இன்னமும் புனர்வாழ்வுக்கு உட்படுத்தப்பட்டு வருவதுடன் அவர்களில் 19 பெண்கள் உள்ளடங்குவதாகவும் புனர்வாழ்வு ஆணையாளர் குறிப்பிட்டார்.
இவர்கள், மன்னாரிலுள்ள மருதன்காடு, பூந்தோட்டம் ஆகிய புனர்வாழ்வு முகாம்களிலும் வெலிகந்தையில் அமைந்துள்ள சேனபுர மற்றும் கந்தர்கொட ஆகிய புனர்வாழ்வு முகாம்களிலும் புனர்வாழ்வுக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றனர் என்றும் அவர் குறிப்பிட்டார்.
இதேவேளை, புனர்வாழ்வுக்கு உட்படுத்தப்பட்ட மேலும் 33பேர் அடுத்த மாதம் அவர்களது உறவினர்களிடம் ஒப்படைக்கப்படவுள்ளனர் என்று புனர்வாழ்வு ஆணையாளர் பிரிகேடியர் ஹெட்டியாரச்சி மேலும் கூறினார்.

ad

ad