புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

9 நவ., 2012

புங்குடுதீவு-தகவல் களஞ்சியம்

புங்குடுதீவு-தகவல் களஞ்சியம் 
(தொகுப்பு சிவ.சந்திரபாலன் ) நன்றி விக்கிபீடியா 

புங்குடுதீவு இலங்கையின் யாழ்ப்பாண மாவட்டத்தின் தென் மேற்குப் பகுதியில் அமைந்துள்ள சப்த தீவுகளில் ஒரு தீவு ஆகும். யாழ் நகரில் இருந்து செல்லும் 18 மைல் நீளமுள்ள பெருஞ்சாலையின் மூலம் இத்தீவு யாழ்நகருடன் இணைக்கப்பட்டுள்ளது. குடாக்கள், முனைகள் என்பன அமையப்பெற்ற இத்தீவின் சுற்றளவு 21 மைல்கள்ஆகும். இது கிழக்கு மேற்காக 5.5 மைல் நீளமும், வடக்கு தெற்காக 3 மைல் அகலமும் கொண்டு தோற்றமளிக்கின்றது.
இத்தீவானது வேலணை வாணர் பாலத்தினால் இணைக்கப்பட்டதன் மூலம் இங்குவாழும் மக்கள் பெரும் பயனைப் பெற்றுள்ளார்கள். குறிகட்டுவான், கழுதைப்பிட்டி போன்ற துறைகள் மூலம் மற்றய தீவுகளுடனான தொடர்புகளைக் கொண்டுள்ளது. இங்கு விவசாயமும் கால்நடை வளர்ப்பும் கடல் வளத்தின் மூலம் மீன்பிடிப்பும்சிறப்பாக நடைபெறுகின்றன.

பெயர்க்காரணம்

புங்குடுதீவு என்ற பெயர் தோன்றியமைக்கு பல்வேறு விளக்கங்கள் கூறப்படுகின்றன.
அக்காலத்தில் புங்கை மரம் நிறைந்த காடாக இவ்விடம் இருந்தமையால் புங்குடுதீவு என பெயர் பெற்றதாக கதைகள் உண்டு.தமிழ்நாட்டில் உள்ள ‘புங்குடி’ என்னும் ஊர்ப் பெயரை புங்குடுதீவுடன் தொடர்பு படுத்தி பெயர் விளக்கம் கூறப்படுவது முண்டு. மேலும் இசுலாமியரின் படையெடுப்பு தமிழகத்தில் ஏற்பட்டபோது அங்குள்ள பூங்குடி ஊரினர் படையெடுப்பாளர்களது கொடுமையில் இருந்து தமது கன்னிப் பெண்களை பாதுகாக்க வேண்டிய அவல நிலையில் இங்கு தப்பி ஓடிவந்து குடியேறியதால் இத்தீவுக்கு ‘பூங்கொடி’ ‘திருப்பூங்கொடி’ எனும் பெயர்களை பெற்றதாயிற்று. இந்த வகையில் பூங்கொடித் தீவு என வழங்கி அது காலப்போக்கில் புங்குடுதீவு என மருவியதாயிற்று என்பர்[1]. இத்தீவானது ஏனைய தீவுகளுக்கு நடுநிலையாகக் காணப்பட்டமையால் ஒல்லாந்தர் இதற்கு ‘மிடில்பேர்க்’ எனப் பெயரிட்டனர் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்க விடயமாகும்.
மேலும் ஒல்லாந்தரால் கடலில் குளித்தெடுத்த சங்குகளை கொண்டுவந்து பதம்பிரித்து பிற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்ட இடமாகவும் இது அமைவு பெற்று விளங்குகின்றது. இதனால் இதற்கு சங்குமாவடி என்று பெயர் பெற்றிருக்கலாம் என அறிஞர்கள் கருதுகின்றனர்[1].

[தொகு]துறைமுகங்கள்

இங்கு புளியடித்துறை, கழுதைப்பிட்டித்துறை, குறிகட்டுவான் துறை, மடத்துவெளித் துறை எனும் நான்கு துறைகள் காணப்படுகின்றன. ‘கோரியா’ என்ற இடத்தில் ஒல்லாந்தரால் கட்டப்பட்ட வெளிச்சவீடு ஒன்று அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்க அம்சமாகும்.
பெருங் கப்பல்களும், செழித்த வாணிபமும் அக்காலத்தில் இருந்தமையால் நடுக் கடலில் கப்பல்கள் சென்று திரியும் இராக் காலத்திலே கப்பல்கள் திசை மாறாது கரையை சேர்வதற்கு துணையாக கடற்கரைப் பட்டினத்தில் 35 அடி உயரமுடையதாக இவ்வெளிச்ச வீட்டை அமைத்துள்ளனர். இவ்வெளிச்ச வீடு 5 செக்கனுக்கு ஒருமுறை விட்டு விட்டு ஒளிரும் வெள்ளை ஒளியை வீசும் வண்ணம் அமைந்து காணப்படுகின்றது[1].

[தொகு]மக்கள் பரம்பல்

இலங்கையின் 1981ம் ஆண்டின் குடிசனமதிப்பீட்டின் படி 14622 பேர் அன்று வாழ்ந்துள்ளார்கள். இன்றைய நாட்டின் இனப்பிரச்சனை காரணமாக அதிகமான மக்கள் இடம் பெயர்ந்து வெளிநாடுகளில் வாழ்கின்றார்கள்.

[தொகு]புங்குடுதீவு-கோயில்கள்

  • ஊரதீவு பாணாவிடை சிவன் கோவில்
  • மடத்துவெளி பாலசுப்பிரமணியர் ஆலயம்
  • மடத்துவெளி வீரகத்தி விநாயகர் ஆலயம்
  • வல்லன் திருபெருந்துறை நாகதம்பிரான் ஆலயம்
  • வல்லன் இலுபெண்ணை நாச்சிமார் கோவில்
  • வல்லன் ஹரிஹர புத்திர ஐயனார் கோவில்
  • கோரியாவடி நாயம்மா கோவில்
  • கலட்டி வரசித்தி விநாயகர் ஆலயம்
  • தல்லையபற்று முருகமூர்த்தி கோவில்
  • சந்தையடி வீரகத்தி விநாயகர் கோவில்
  • பெருங்காடு கந்தசாமி கோவில்
  • குறிகட்டுவான் மனோன்மணி அம்பாள் கோவில் (பேச்சியம்மன் )
  • பெருங்காடு ஸ்ரீ முத்துமாரி அம்பாள் ஆலயம்
  • பெருங்காடு மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆலயம் (சிவன் கோவில்)
  • இறுபிட்டி பிட்டியம்பதி ஸ்ரீ காளிகாபரமேஸ்வரி அம்பாள் ஆலயம்
  • இறுபிட்டி அரியநாயகன்புலம் வீரகத்தி விநாயகர் ஆலயம் -அரியநாயகன்புலம்
  • இறுபிட்டி பெரியபுலம் வீரகத்தி விநாயகர் கோவில்
  • பெருங்காடு புனித புரட்டஸ்தாந்து தேவஸ்தானம்
  • பெருங்காடு புனித சவேரியார் கோவில்
  • பெருங்காடு புனித அந்தோனியார் ஆலயம்)
  • புங்குடுதீவு கண்ணகை அம்மன் கோவில்(ஸ்ரீ ராஜாராஜேஸ்வரி அம்மன் கோவில்)

[தொகு]இங்கு வாழ்ந்த பெரியோர்கள்

  • மு. பொன்னம்பலம், எழுத்தாளர்
  • சி. சண்முகம், நாடகக் கலைஞர்
  • தம்பிஐயா தேவதாஸ், எழுத்தாளர்
  • க.அம்பலவாணர்(பெரியவாணர்)சமூகசேவை,அரசியல்,கல்வி,
  • ச.அம்பலவாணர்(சின்னவாணர்)சமூகசேவை,அரசியல்,கல்வி,
  • மு.தளையசிங்கம்.புரசி எழுத்தாளர்,கல்வி,சமூகசேவை
  • எஸ்.கே.மகேந்திரன்-வழக்கறிஜர்,எழுத்தாளர்,அரசியல்,சமூகசேவை,சட்டம்
  • சு.வில்வரத்தினம்-புரட்சிஎழுத்தாளர்,சமூகசேவை
  • வ.பசுபதிப்பிள்ளை-கல்வி,ஆன்மிகம்,சமூகசேவை
  • க.ஐயாத்துரை கல்வி.சமூகசேவை
  • க.திருநாவுக்கரசு-சர்வோதயம்,சமூகசேவை,அரசியல்
  • பொன.கனகசபை --வித்துவான் -ஆன்மிகம்
  • சி.ஆறுமுகம் --வித்துவான் - கல்வி
  • என்.எ.வைத்திலிங்கம் -பொறியியல் நிபுணர்
  • சு-வில்வரத்தினம் அதிபர்- கல்வி,சமூகசேவை
  • க.செல்வரத்தினம்-அதிபர் -கல்வி,இலக்கியம்,கலை
  • ப.கதிரவேலு- வழக்கறிஜர்,அரசியல்,சமூகசேவை,சட்டம்
  • கணபதிபிள்ளை கந்தையா --அதிபர்-கல்வி -சமூகசேவை
  • க.செல்லத்துரை -மு.கி.ச.தலைவர்,சமூகசேவை
  • சி.கணபதிபிள்ளை- வைத்திய விற்பன்னர்
  • பேராயர் டேவிட் ஜெயரத்தினம் அம்பலவாணர்
  • சி.இ.சதாசிவம்பிள்ளை -கல்வி
  • சி.சரவனமுத்துசுவாமிகள் -சிவதொண்டர்
  • பண்டிதர் சி.சரவணார் -ஆன்மீக போதகர்
  • கு.வி.செல்லத்துரை - அதிபர்-மு.தலைவர்,அகில இ.த.ஆ.சங்கம்
  • மா.முருகேசு -உடையார்,சமூகசேவை
  • பெ.கார்த்திகேசு -மு.கி.ச.உபதலைவர்,ச.ச.நி.ஸ்தாபகர்
  • வி.கே.குணரத்தினம் வைத்தியர்
  • நா.கணேசராசகுருக்கள்-சமயம்
  • சே.சிவசுப்ரமனியகுருக்கள்-சமயம்
"க.முத்துதம்பி -அதிபர்-கல்வி
  • கு.வி.தம்பிதுரை மு-கி-ச-தலைவர்,சமூகசேவை
  • க.தாமோதரம்பிள்ளை- கல்வி-சங்கீதம்
  • தம்பிபிள்ளை -வைத்தியர்
  • அ.குழந்தைவேலு -சமூகசேவை-ஆன்மிகம்
  • இராமச்சந்திர ஐயர் -சமயம்
  • மார்கண்டு சோதிநாதர்--ஆன்மிகம்,சமூகசேவை
  • இ.கெங்காதரகுருக்கள்-சமயம்
  • சு.பரராசசிங்கம்- சமூகசேவை அரசியல்
  • வீ.வ.நல்லதம்பி-அதிபர்-கல்வி-அரசியல்,சமூகசேவை
  • நாக-பத்மநாதன்- எழுத்தாளர் பெ கெ
  • க.ஸ்ரீஸ்கந்தராசா-(சித்ரா மணாளன்),எழுத்தாளர்,சமூகசேவை
  • சி.க.நாகேசு -சமூகசேவை,அரசியல்
  • போ.நாகேசு-சமூகசேவை-அரசியல்
  • க.சிவராமலிங்கம்-அதிபர்,கல்வி,இலக்கியம்,கலை
  • இ.குலசேகரம்பிள்ளை-கல்வி,சமூகசேவை
  • க.தியாகராசா-கல்வி,சமூகசேவை

[தொகு]பாடசாலைகள்

  • புங்குடுதீவு ஸ்ரீ கணேச மகா வித்தியாலயம்
  • புங்குடுதீவு கமலாம்பிகை கனிஷ்ட மகா வித்தியாலயம்
  • யா/புங்குடுதீவு மகா வித்தியாலயம்
  • யா/புங்குடுதீவு சண்முகநாதன் கனிஷ்ட மகா வித்தியாலயம்
  • யா/புங்குடுதீவு சுப்பிரமணிய மகளிர் மகா வித்தியாலயம்
  • யா/புங்குடுதீவு சித்திவிநாயகர் கனிஷ்ட மக வித்தியாலயம்
  • யா/புங்குடுதீவு திருநாவுக்கரசு வித்தியாலயம்
  • யா/புங்குடுதீவு பெருங்காடு அ.மி.பாடசாலை
  • யா/புங்குடுதீவு குறிகட்டுவான் அ.மி.த.க.பாடசாலை
  • யா/புங்குடுதீவு இறுபிட்டி அ.மி.த.க.பாடசாலை
  • யா/புங்குடுதீவு இறுபிட்டி அரியநாயகன்புலம் த.க பாடசாலை
  • யா/புங்குடுதீவு சந்தையடி ரோமன் கத்தோலிக்க வித்தியாலயம்
  • யா/புங்குடுதீவு ராஜேஸ்வரி வித்தியாலயம்
  • யா/புங்குடுதீவு துரைச்சாமி வித்தியாலயம்
  • யா/புங்குடுதீவு பராசக்தி வித்தியாலயம்

[தொகு]ஊர்கள்

  • மடத்துவெளி
  • ஊரதீவு
  • வல்லன்
  • மாவுதிடல்
  • வீராமலை
  • கிழக்கூர்
  • முருக்கடி
  • கண்ணகிபுரம்
  • பெருங்காடு
  • சங்கத்தாகேணி
  • குறிகட்டுவான்
  • இறுப்பிட்டி
  • கேரதீவு
  • வரதீவு
  • சிவலைப்பிட்டி

[தொகு]சமூக சேவை அமைப்புக்கள்

  • மடத்துவெளி சனசமூக நிலையம்,
  • ஊரதீவு சனசமூக நிலையம்,
  • வல்லன் சனசமூக நிலையம்,
  • நாசரேத் சனசமூக நிலையம்,
  • பாரதி சனசமூக நிலையம்,
  • பெருங்காடு சனசமூக நிலையம்,
  • சிவலைபிட்டி சனசமூக நிலையம்,
  • இருபிட்டி சனசமூக நிலையம்,
  • ஐங்கரன் சனசமூக நிலையம்,
  • காந்தி சனசமூக நிலையம்,
  • ஊரதீவு கி.மு.சங்கம்,
  • வல்லன் கி.மு.சங்கம்,
  • ஆலடி கி.மு.சங்கம்,
  • பெருங்காடு கி.மு.சங்கம்,
  • ஊரதீவு அறிவகம்,
  • வட இலங்கை சர்வோதயம்,
  • புங்குடுதீவு இளைஞர் சங்கம்,
  • ஊரதீவு இளம் தமிழர் மன்றம்,
  • சர்வோதயம்(புங்குடுதீவு கிழக்கு,
  • மக்கள் சேவா சங்கம்,
  • புங்குடுதீவு நலன்புரி சங்கம்,
  • இந்து இளைஞர் ஒன்றியம்

[தொகு]அரச பொது நிறுவனங்கள்

  • பிரதானதபாலகம் சந்தையடி
  • உபதபாலகம் ஊரதீவு
  • உபதபாலகம் வல்லன்
  • உபதபாலகம் தட்டையன்புலம்
  • உபதபாலகம் குறிகாட்டுவான்
  • உபதபாலகம் இருபிட்டி
  • பொதுநூலகம் சந்தை
  • பொது வைத்தியசாலை
  • ஊரதீவு வெளிநோயாளர் நிலையம்
  • இருபிட்டி வெளிநோயாளர் நிலையம்
  • மக்கள் வங்கி
  • கிராமிய வங்கி
  • பலநோக்கு கூட்டுறவு சங்கம் சந்தையடி(புங்குடுதீவு-நயினாதீவு)
  • குறிகட்டுவான் துறைமுகம்
  • கழுதைப்பிட்டி துறைமுகம்
  • கமநல சேவை நிலையம்

[தொகு]முன்பள்ளிகள்

  • அறிவகம்
  • மடத்துவெளி சனசமூக நிலையம்
  • சிவலைபிட்டி சனசமூக நிலையம்
  • கிராமசபை
  • சர்வோதயம்
  • காந்தி சனசமூகநிலையம்
  • ஐங்கரன் சனசமூகநிலையம்
  • நாசரேத் சனசமூகநிலையம்
  • பாரதி சனசமூகநிலையம்
  • தல்லையபற்று சனசமூகநிலையம்
  • சர்வமதமுன்பள்ளி
  • இருபிட்டி சனசமூகநிலையம்
  • தென்னிதியதிருசபை
  • வல்லன்சனசமூகநிலையம்

[தொகு]குளங்கள்

  • வெள்ளைக்குளம்
  • தில்லங்குளம்,
  • அரியரிகுளம்
  • முருகன்கோவில்குளம்
  • நாகதம்பிரான்குளம்
  • ஆமைக்குளம்
  • திகழிக்குளம்,
  • பெரியகிராய்
  • மக்கிகுண்டு
  • நக்கந்தைகுளம்
  • தர்மக்குண்டு
  • புட்டுனிகுளம்
  • வெட்டுகுளம்
  • கண்ணகிஅம்மன்தெப்பகுளம்
  • கண்ணகி அம்மன் குளம்
  • சந்தையடிகுளம்
  • கந்தசாமிகோவில்குளம்
  • விசுவாமிதிரன்குளம்
  • மாரியம்மன்கோவில்குளம்

[தொகு]வட்டாரங்கள்-கிராமங்கள்

ஓன்று ----சந்தையடி, பெருங்காடு வடக்கு, கரந்தலி
இரண்டு ----முருக்கடி, சந்தையடி, பெருங்காடு கிழக்கு
மூன்று ----பெருங்காடு,நடுவுதுருத்தி,குறிகட்டுவான்,நுணுக்கால்
நான்கு ----சின்ன இருபிட்டி, தம்பர் கடையடி, புளியடி, மாநாவெள்ளை
ஐந்து ----இருபிட்டி கிழக்கு, தனிப்பனை
ஆறு ----இருபிட்டி வடக்கு, இருபிட்டி மேற்கு, வடக்கு , கழுதபிட்டி, புளியடி, கேரதீவு மேற்கு
ஏழு ----ஊரதீவு, வரதீவு, கேரதீவு கிழக்கு, மடத்துவெளி(பிரதான வீதிக்கு மேற்கே ), பள்ளகாடு
எட்டு ----மடத்துவெளி, நாகதம்பிரான் கோவிலடி
ஒன்பது ----வல்லன், மாவுதிடல்
பத்து ----வீராமலை, தட்டையன்புலம், கோட்டைக்காடு, பொன்னாந்தோட்டம்
பதினொன்று ----ஆலடி போக்கதை, முற்றவெளி, தல்லமி
பன்னிரண்டு ----கிழக்கூர், குறிச்சிகாடு, தல்லையப்பற்று

[தொகு]ஊருக்கானஉலகஅமைப்புக்கள்

  • சுவிட்சர்லாந்து:-புங்குடுதீவு மக்கள் விழிப்புணர்வு ஒன்றியம்
  • கனடா:-புங்குடுதீவு பழைய மாணவர் சங்கம்
  • பிரான்ஸ்:-புங்குடுதீவு மக்கள் ஒன்றியம்
  • ஜெர்மனி:-புங்குடுதீவு அபிவிருத்தி ஒன்றியம்
  • பிரித்தானி:-புங்குடுதீவு நலன்புரிசங்கம்
  • நோர்வே:-திருநாவுக்கரசு அறக்கட்டளை

[தொகு]ஊடகவியலாளர்கள்

  • தம்பியையா தேவதாஸ் -இலங்கை வானொலி கல்வி சேவை
  • வீ.டி.இளங்கோவன் -வானொலி பத்திரிகை
  • நாகேசு தர்மலிங்கம் -வானொலி பத்திரிகை (வீரகேசரி,தினகரன்)
  • துரை.ரவி - -வானொலி பத்திரிகை (கனடா)
  • எஸ்.எம்.தனபாலன்.பத்திரிகை (கனடா)
  • சிவ-சந்திரபாலன்- பத்திரிகை,வானொலி-IBC,TRT,தொலைகாட்சி-TRT,விளையாட்டுத்துறை,இணையம்(சுவிஸ்)
  • தா.பாலகணசன்-வானொலி,தொலைகாட்சி, (பிரான்ஸ்-TTN )
  • ஆர்.ஆர்.பிரபா -வானொலி,தொலைகாட்சி(கனடா -TVI)
  • க.அரியரத்தினம் -வானொலிABC(பிரான்ஸ்)
  • தி-மோகன் - வானொலி TRT,தொலைகாட்சி-TRT (பிரான்ஸ்)
  • சந்தியோ அமிர்தராஜ் -வானொலி (நெதர்லாந்து )
  • சண்-ரவி - இணையம் -மை கதிரவன் (சுவிஸ்)
  • எஸ்.ஸ்ரீ குகன் - இணையம் -லங்காஸ்ரீ (சுவிஸ்)

[தொகு]எழுத்தாளர்கள்

  • மு.தளையசிங்கம் -சிந்தனை ,புரட்சி எழுத்தாளர்
  • சு.வில்வரத்தினம் -கவிஞர் ,பத்திரிகையாளர்
  • த.துரைசிங்கம் -மழலை எழுத்தாளர்
  • மு.பொன்னம்பலம் -,கவிஞர், எழுத்தாளர்
  • பொன்.கனகசபை ஆன்மீக எழுத்தாளர் கா.குகபாலன் -எழுத்தாளர் -புவியியல்
  • சி.ஆறுமுகம் -ஆன்மீக எழுத்தாளர்
  • சி.க.நாகலிங்கம் -ஆன்மீக எழுத்தாளர்
  • வீ.வ.நல்லதம்பி இலக்கியம்
  • எஸ்.கே.மகேந்திரன் -எழுத்தாளர்
  • இந்து மகேஷ் -வீரகேசரி நாவல்கள் ,சிறுகதை .இதழியல்
  • தம்பியையா தேவதாஸ் -மொழிபெயர்ப்பு எழுத்தாளர்
  • க.திருநாவுக்கரசு. -எழுத்தாளர்
  • ப.கனகலிங்கம் - இதழியல் எழுத்தாளர்
  • வி.டி.திருநாவுக்கரசு -இதழியல் எழுத்தாளர் (நாவேந்தன்)
  • புலவர் ஈழத்து சிவானந்தன் -இதழியல் பத்திரிகை ஆன்மீக எழுத்தாளர்
  • மு.நேமிநாதன் -இதழியல் .ஆங்கில மொழிபெயர்ப்பு எழுத்தாளர்
  • வீ.டி.இளங்கோவன்.கவிஞர்,எழுத்தாளர்
  • நக.பத்மநாதன் -எழுத்தாளர்
  • ஐ.சிவசாமி - கவிஞர்.நாடக எழுத்தாளர்
  • க.செல்வரத்தினம் -நாடக எழுத்தாளர்
  • நாகேசு தர்மலிங்கம் -எழுத்தாளர்
  • எஸ்.எம்.தனபாலன் -நாடகம் சிறுகதை எழுத்தாளர்
  • நாக.சாந்தலிங்கம் - அரசியல் எழுத்தாளர்
  • சித்ராமணாளன் -அரசியல் எழுத்தாளர்
  • கௌசல்யா சொர்ணலிங்கம் -கவிதை,எழுத்தாளர்
  • கமலாசினி சிவபாதம் -எழுத்தாளர்
  • நா.தேவதாசன் -கவிதை எழுத்தாளர்
  • யசோதா பொன்னம்பலம் -இதழியல்
  • வீ.டி.தமிழ்மாறன் .இதழியல் ,அரசியல் எழுத்தாளர்
  • ச.சிவானந்தன் -கவிதை எழுத்தாளர் (தாட்சாயினி)
  • கனக.திருச்செல்வம் -கவிதை எழுத்தாளர்
  • சிவ-சந்திரபாலன் -நாடகம்,வானொலி,கவிதை,இதழியல் எழுத்தாளர்
  • துரை.ரவீந்திரன் -நாடகம் சிறுகதை எழுத்தாளர்
  • கண்ணதாசன் .-கவிதை எழுத்தாளர்
  • சு-மகாலிங்கம் -எழுத்தாளர்
  • ஐ .க.அரியரத்தினம்-எழுத்தாளர் இதழியல்
  • பகீரதன் - கவிதை எழுத்தாளர் (சிவசித்ரா)
  • மைதிலி அருளையா -கவிதை எழுத்தாளர்
  • மாணிக்கவாசகர் -கவிதை எழுத்தாளர்
  • மு.முத்துக்குமார் -நாடகம் கவிதை வானொலி எழுத்தாளர்
  • சந்தியோ அமிர்தராஜ் -இதழியல் வானொலி எழுத்தாளர்
  • சண்முகம் மோகனதாஸ் -கவிதை வானொலி எழுத்தாளர்
  • சிவலிங்கம்(அம்மான்) -நாடக எழுத்தாளர்
  • பாலகணேசன் -ஆய்வு எழுத்தாளர்
  • த-மதி - கவிதை எழுத்தாளர்

[தொகு]இசைக் கலைஞர்கள்

பொன்.சுந்தரலிங்கம் -கர்நாடகம் ,விடுதலை கீதங்கள் எஸ் .ஜி.சாந்தன் -விடுதலை கீதங்கள் க.தாமோதரம்பிள்ளை -ஆசிரியர் திருப்பூங்குடி வி.ஆறுமுகம் -வில்லிசை சண்முகம்பிள்ளை -மிருதங்கம் நடராச -வயலின் க.வினசிதம்பி ஆசிரியர் தா.இராசலிங்கம் .ஆசிரியர் நா.தில்லையம்பலம் -ஆசிரியர் கனகசுந்தரம் -ஆசிரியர் சந்திரபாலன் ஆசிரியர் தம்பி ஐயா-தபேலா கனகலிங்கம் ஆசிரியர் சண்முகலிங்கம் ஆசிரியர் என்-ஆர்.கோவிந்தசாமி -நாதஸ்வரம் (இவரது தயார் புங்குடுதீவை சேர்ந்தவர் ) என்.ஆர்.சின்னராசா -தவில் என்.ஆர்.சந்தனகிருச்ணன் -நாதஸ்வரம் விமலாதேவி -ஆசிரியர் ராஜேஸ்வரி -ஆசிரியர் வாசுகி விக்னேஸ்வரன் -நாட்டிய நர்த்தகி மஞ்சுளா திருநாவுக்கரசு -வயலின்

[தொகு]திரைப்படக் கலைஞர்கள்

ad

ad