புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

24 நவ., 2012

தென்னாபிரிக்காவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் : கிளார்க் இரட்டைச்சதம்தென்னாபிரிக்காவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்டில் அணித் தலைவர் மைக்கல் கிளார்கின் இரட்டைச்சதம் கைகொடுக்க அவுஸ்திரேலிய அணி முதல்நாள் ஆட்டநேர முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 482 ஓட்டங்களைப் பெற்று வலுவான நிலையில் உள்ளது.

அவுஸ்திரேலியாவுக்கு கிரிக்கெட் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள தென்னாபிரிக்க அணி மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. இதில் பிரிஸ்பேனில் நடைபெற்ற முதலாவது டெஸ்ட் போட்டி வெற்றி தோல்வியின்றி சமநிலையில் முடிவடைந்தது.

இரண்டாவது டெஸ்ட் போட்டி அடிலெய்டில் நடைபெற்றுவருகின்றது. இதில் நாணயச் சுழற்சியில் வெற்றிபெற்ற அவுஸ்திரேலிய அணித் தலைவர் மைக்கல் கிளார்க் துடுப்பாட்டத்தை தெரிவு செய்தார்.

இந்நிலையில் ஆரம்பத்துடுப்பாட்ட வீரராக களமிறங்கிய எட் கோவன் 10 ஓட்டங்களுடனும் குயினே ஓட்டமெதனையும் பெறாது ஆட்டமிழக்க, ரிக்கி பொண்டிங் 4 ஓட்டங்களுடன் ஏமாற்றினர். அணித்தலைவர் மைக்கல் கிளார்க் ஆட்டமிழக்காமல் 224 ஓட்டங்களை பெற்றுக்கொடுக்க டேவிட் வார்னர் 119 ஓட்டங்களையும் மைக்கல் ஹசி 103 ஓட்டங்களையும் பெற்றனர்.

இந்நிலையில், இரண்டாவது டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்டநேர முடிவில் அவுஸ்திரேலிய அணி 5 விக்கெட்டுகளை இழந்து 482 ஓட்டங்களை எடுத்திருந்தது. கிளார்க் (224)ஓட்டங்களைப் பெற்று ஆட்டமிழக்காமல் களத்திலுள்ளார். தென்னாபிரிக்க அணி சார்பில் காலிஸ் மற்றும் மோர்னே மோர்கல் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் ஸ்டெய்ன் ஒரு விக்கெட்டையும் வீழ்த்தியுள்ளனர்.

ad

ad