புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

27 நவ., 2012

இங்கிலாந்து  9.4 ஓவரில் விக்கெட் இழப்பின்றி 58 ரன் எடுத்து 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
இந்தியா-இங்கிலாந்து அணிகள் மோதும் 2-வது டெஸ்ட்  கிரிக்கெட் போட்டி  மும்பை வான்கடே மைதானத்தில் நடந்தது.


இந்தியா முதல் இன்னிங்சில் 327 ரன்னும், இங்கிலாந்து முதல் இன்னிங்சில் 413 ரன்னும் எடுத்தன. 86 ரன்கள் பின் தங்கிய நிலையில் 2-வது இன்னிங்சை ஆடிய இந்தியா நேற்றைய 3-வது நாள் ஆட்ட நேர முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 117 ரன் என்ற பரிதாபகரமான நிலையில் இருந்தது. காம்பீர் 53 ரன்னிலும், ஹர்பஜன் 1 ரன்னிலும் ஆட்டம் இழக்காமல் இருந்தனர்.

இன்று (திங்கட்கிழமை) 4-வது நாள் ஆட்டம் நடந்தது. 31 ரன்கள்  முன்னிலை கைவசம் 3  விக்கெட் என்ற நிலையில் இந்தியா தொடர்ந்து ஆடியது.

ஆட்டம் தொடங்கிய 45 நிமிடத்தில் இந்திய அணியின் எஞ்சிய 3 விக்கெட்டுகளும் சரிந்தன. கடைசியாக தொடக்க வீரர் காம்பீர் 65 ரன்னில் ஆட்டம் இழந்தார்.

இந்திய அணி 44.1 ஓவரில் 142 ரன்னில் சுருண்டது. பனேசர் 6 விக்கெட்டும்,  சுவான் 4 விக்கெட்டும் கைப்பற்றினார்கள்.

இங்கிலாந்து அணிக்கு 57 ரன் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. அந்த அணி 9.4 ஓவரில் விக்கெட் இழப்பின்றி 58 ரன் எடுத்து 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. காம்டன் 30 ரன்னும், கேப்டன் கூக் 18 ரன்னும் எடுத்து ஆட்டம் இழக்காமல் இருந்தனர்.

186 ரன்கள் குவித்த பீட்டர்சன் ஆட்ட நாயகன் விருதை பெற்றார். இன்றைய ஆட்டம் சுமார் 1 மணி நேரத்தில் முடிந்தது. இன்னும்  ஒரு நாள் ஆட்டம் எஞ்சி இருக்கிறது. அந்த அளவுக்கு இந்த டெஸ்டில் இங்கிலாந்து ஆதிக்கம் செலுத்தியது.

இந்த வெற்றி மூலம் 4 டெஸ்ட் கொண்ட தொடர் 1-1 என்ற கணக்கில் சம நிலையில் உள்ளது. அகமதாபாத்தில் நடந்த முதல் டெஸ்டில் இந்தியா 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இருந்தது.

இரு அணிகள் மோதும் 3-வது டெஸ்ட் வருகிற 5-ந்தேதி கொல்கத்தாவில் தொடங்குகிறது.

ad

ad