புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

29 நவ., 2012


இலங்கைக்கு எதிரான 2-வது டெஸ்ட்: நியூசிலாந்து வெற்றி பெற வாய்ப்பு
ஒரு நாள் மட்டுமே உள்ள நிலையில் 6 விக்கெட்டை வைத்துக்கொண்டு 316 ரன் எடுக்க வேண்டியுள்ளதால் நியூசிலாந்து அணி வெற்றி தொடரை 1-1 என சமன் செய்ய வாய்ப்புள்ளது
நியூசிலாந்து அணி இலங்கையில் சுற்றுப் பயணம் செய்து இரண்டு டெஸ்ட் போட்டி கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. கலேயில் நடந்த முதல் டெஸ்டில் இலங்கை அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இரண்டாவது போட்டி 25-ந்தேதி கொழும்பில் தொடங்கி நடைபெற்று வருகிறது. டாஸ் வென்று பேட்டிங் செய்த நியூசிலாந்து முதல் இன்னிங்சில் 412 ரன்கள் குவித்தது. வில்லியம்சன் 135 ரன்களும், டெய்லர் 142 ரன்களும் குவித்தனர்.
 
 
பின்னர் முதல் இன்னிங்சை தொடங்கிய இலங்கை 244 ரன்களில் ஆல் அவுட் ஆனது. சமரவீரா 76 ரன்கள் எடுத்தார். 168 ரன்கள் முன்னிலையில் இருந்த நியூசிலாந்து 2-வது இன்னிங்சில் 9 விக்கெட்டு இழப்பிற்கு 194 ரன் எடுத்து டிக்ளேர் செய்தது. இதனால் இலங்கை அணியை விட 362 ரன்கள் முன்னிலை பெற்றது.
 
363 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இரண்டாவது இன்னிங்சை தொடங்கிய இலங்கை அணி 4-வது நாள் ஆட்ட முடிவில் 47 ரன்கள் எடுப்பதற்குள் 4 முக்கிய விக்கெட்டுகளை இழந்துள்ளது. பரனவிதானா (0), தில்சான் (14), சங்கக்காரா (16), ஜெயவர்த்தனே (5) ரன்னிலும் ஆட்டம் இழந்தனர்.
 
நாளை ஒரு நாள் மட்டுமே உள்ள நிலையில் 6 விக்கெட்டை வைத்துக்கொண்டு 316 ரன் எடுக்க வேண்டியுள்ளதால் நியூசிலாந்து அணி வெற்றி தொடரை 1-1 என சமன் செய்ய வாய்ப்புள்ளது

ad

ad