ஞாயிறு, நவம்பர் 11, 2012

மகாத்மா காந்தியின் பேரன் அமெரிக்க கென்சாஸ் மாநில சட்டசபைக்கு தேர்வு
 
மகாத்மா காந்தியின் பேரன் அமெரிக்க கென்சாஸ் மாநில சட்டசபைக்கு தேர்வு

அமெரிக்காவில் கடந்த 6-ந்தேதி ஜனாதிபதிக்கான தேர்தல் நடந்தது. இதில் ஜனநாயக கட்சியின் பராக் ஒபாமா வெற்றி பெற்று மீண்டும் அதிபரானார். அப்போது நடந்த கென்சாஸ் மாநில சட்டசபைக்கான தேர்தலில் மகாத்மா காந்தியின் பெரிய பேரன் சாந்தி காந்தி போட்டியிட்டார்.
 
குடியரசு கட்சி சார்பாக போட்டியிட்ட அவர் ஜனநாயக கட்சியின் தியோடர் டெட் என்ஸ்லேயை விட 9 சதவிகித புள்ளி வித்தியாசத்தில் வெற்றிபெற்றார். இதன் மூலம் அவர் கென்சாஸ் மாநிலத்தின் 52-வது மாவட்ட சட்டசபைக்கு தேர்வானார்.
 
72 வயதான எம்.எல்.ஏ. சாந்தி காந்தி, மகாத்மா காந்தியின் பேரன் காந்திலால் மற்றும் சரஸ்வதி காந்தி தம்பதிக்கு மகனாக பிறந்தவர். ஓய்வு பெற்ற இருதய சிகிச்சை நிபுணரான இவர் 6,413 வாக்குகள் பெற்றார். எதிர்த்து போட்டியிட்ட என்ஸ்லே 5,357 வாக்குகள் பெற்றார். 1967-ம் ஆண்டு மும்பை பல்கலைக்கழகத்தில் படிப்பை முடித்த அவர் பின்னர் அமெரிக்காவில் குடியேறினார்.