புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

2 நவ., 2012


82 வயது தாயை அனாதையாக கட்டிலோடு
நடுரோட்டில் போட்டுவிட்டு போன மகன்கள்


ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் கண்டிகா கிராமத்தைச் சேர்ந்தவர் ரங்கையா மனைவி சுப்பம்மா (வயது 82). இவருக்கு 2 மகன், 2 மகள் உள்ளனர். ரங்கையா மரணம் அடைந்ததையொட்டி சுப்பம்மா தனது மகள் வீட்டில் தங்கி இருந்தார்.



தன்னால் தாயை கவனிக்க முடியவில்லை என்று கூறிய மகள் அதே கிராமத்தில் வசிக்கும் மூத்த சகோதரர் முனிரத்தினம் நாயுடு வீட்டில் தாயை விட்டுச் சென்றார். அவர் தாய் சுப்பம்மாவை திருப்பதியில் வசிக்கும் தனது தம்பி நாதமுனி நாயுடு வீட்டில் ஒப்படைத்தார். நாதமுனி நாயுடு வேன் டிரைவராக உள்ளார். மனைவி 2 குழந்தைகள் உள்ளனர். அவராலும் தாயை கவனிக்க முடியவில்லை.

தாயை சகோதரர், சகோதரியும் ஏற்கவில்லை. இதனால் முனிரத்னம் நாயுடு தாயை ஒரு கட்டிலில் கிடத்தி தூக்கி வந்து திருப்பதி பைபாஸ் சாலையில் உள்ள பஸ் நிறுத்தத்தில் அனாதையாக விட்டுச் சென்று விட்டார். கடந்த 15 நாட்களாக மழையிலும், குளிரிலும் சுப்பம்மா நடுங்கியபடி கட்டிலில் முடங்கி கிடந்தார். பக்கத்து டீக்கடைக்காரர் மூதாட்டிக்கு சாப்பாடு வழங்கினார்.

மூதாட்டியின் பரிதாப நிலை பற்றிய தகவல் கிடைத்ததும் திருப்பதி நகர போலீஸ் சூப்பிரண்டு பிரபாகர்ராவ் மூதாட்டியை முதியோர் காப்பகத்தில் சேர்க்க முடிவு செய்தார். ஆனால் அதற்கு அந்த மூதாட்டி சம்மதிக்கவில்லை. மகன் வீட்டுக்குத்தான் செல்வேன் என்று பிடிவாதமாக கூறினார். உடனே போலீசார் உங்கள் மகன்களை அழைத்து பேசுகிறோம் அவர்கள் வரும் வரை காப்பகத்தில் தங்குங்கள் என்று கூறி சமாதானப்படுத்தி சுப்பம்மாவை முதியோர் இல்லத்தில் சேர்த்தனர்.

82 வயதில் தாயை அனாதையாக விட்டுச் சென்ற மகன்களிடம் விசாரணை நடத்த போலீசார் முடிவு செய்துள்ளனர்.

ad

ad