புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

9 நவ., 2012



துப்பாக்கி படத்தின் ரிலீஸ் 9-ஆம் தேதியிலிருந்து 13-ஆம் தேதிக்கு மாற்றப்பட்டிருக்கிறதாம்
விஜய் ரசிகர்கள் ஏமாற்றம்!



கலைப்புலி எஸ்.தாணு தயாரிப்பில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கி விஜய், காஜல் அகர்வால் ஜோடியாக நடித்து வெளிவரும் படம் துப்பாக்கி. 2012-ஆம் ஆண்டில் மிகவும் எதிர்பார்க்கப்படும் படங்களில் துப்பாக்கியும் ஒன்று.  எந்த வித பிரச்சனையும் இல்லாமல், திரைக்கு வரவேண்டிய படம் அனைத்து பிரச்சனைகளையும் சந்தித்து ரிலீஸுக்கு தயாராக இருக்கிறது.

ஆனால் இப்போது பிரச்சனை படம் மூலமாக இல்லையாம், படத்தின் மிகப் பெரிய தூண்களாக சொல்லப்பட்ட ஏ.ஆர்.முருகதாஸ், தாணு, விஜய், ஹாரிஸ் ஜெயராஜ் ஆகியோரின் சதுரங்க மோதல் தான் என்கிறார்கள். படம் துவங்கும் போது விஜய்யும், முருகதாஸும் நல்ல புரிதலுடன் படத்தை துவங்கினாலும், அது கடைசி வரை நீடிக்கவில்லையாம். 

     
 பெரிய நடிகர், 
பெரிய இயக்குனர், பெரிய தயாரிப்பாளர், பெரிய இசையமைப்பாளர் என எல்லாம் பெரிய இடமாக இருப்பது தான் துப்பாக்கி படத்தின் ரிலீஸ் 9-ஆம் தேதியிலிருந்து 13-ஆம் தேதிக்கு மாற்றப்பட்டிருக்கிறதாம். 

இந்தியாவில் டிக்கெட் ரிசர்வேஷன் இரண்டு நாட்களுக்கு முன் தான் துவங்கும் என்பதால் இந்த தேதி மாற்றம் இங்கு மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தவில்லை. ஆனால் வெளிநாடுகளில் கிட்டத்தட்ட 50000 டிக்கெட்டுகள் வரை விற்கப்பட்டுவிட்டதால் தியேட்டர் உரிமையாளர்களுக்கு மிகப்பெரிய இழப்பு ஏற்பட்டுள்ளதாம். இதை எப்படி சரிகட்டுவது என்ற குழப்பத்தில் இருக்கிறார்களாம் தியேட்டர் உரிமையாளர்கள்.

13-ஆம் தேதி துப்பாக்கி எப்படியும் ரிலீஸ் செய்யப்பட்டு விடும் என்ற நம்பிக்கையில் 13-ஆம் தேதிக்கான ரிசர்வேஷனை நேற்று இரவு 12 மணிக்கே(அதாவது இன்று) சென்னை மவுண்ட்ரோட்டில் உள்ள மல்டிப்ளக்ஸ் திரையரங்கம் துவங்கிவிட்டது. ரிசர்வேஷன் ஓபன் ஆன இரண்டரை மணி நேரத்தில் அனைத்து டிக்கெட்டுகளும் விற்றுப்போனதில் அனைவருக்கும் மகிழ்ச்சியாம். ஒருவேளை மறுபடியும் ரிலீஸ் தேதி மாற்றப்பட்டால் துப்பாக்கி படத்தை ரிசர்வேஷன் செய்த நேரத்திலேயே வேறு ஏதாவது படத்தை திரையிடும் என்ற திட்டத்தில் இருக்கிறார்களாம். ஆனால் தீபாவளிக்கு துப்பாக்கி வெடிப்பது உறுதி.

ad

ad