புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

1 நவ., 2012


நக்கீரனுக்கு எதிராக மதுரை ஆதினம் தொடர்ந்த வழக்கிற்கு சென்னை உயர்நீதிமன்றம் தடை!
துரை ஆதினத்தில் நடக்கும் பல்வேறு விஷயங்களை நக்கீரன் முதல் முதலில் அம்பலப்படுத்தியது. இதைத்தொடர்ந்து தன்னைப் பற்றி நக்கீரன் எந்த செய்தியும் வெளியிடக் கூடாது என்று ஒரு சிவில் வழக்கு சென்னை சிட்டி சிவில் கோர்ட்டில் மதுரை ஆதினம் அருணகிரிநாதர் சார்பில் தாக்கல் செய்யப்பட்டது.
 
இந்த வழக்கை எதிர்த்து நக்கீரன் சார்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கில், பொது வாழ்வில் இருக்கும் ஒரு பொதுமனிதர் தன்னைப் பற்றி பத்திரிகையில் செய்தி வெளியிடக் கூடாது என்று தடை கேட்பது இந்திய அரசியல் அமைப்பு சட்டத்திற்கும், பத்திரிகை சுதந்திரத்திற்கும் எதிரானது. 
எனவே, மதுரை ஆதினம் தொடர்ந்துள்ள வழக்கு சட்ட விரோதமானது. அந்த வழக்கு செல்லாது என அறிவிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்பட்டது.
இந்த வழக்கை இன்று (01.11.2012) விசாரித்த நீதியரசர் ஆர்.எஸ்.ராமநாதன், நக்கீரனுக்கு எதிராக சிட்டி சிவில் நீதிமன்றத்தில் மதுரை ஆதினம் தொடர்ந்த வழக்கிற்கு தடை விதித்தார்.
நக்கீரன் சார்பாக வழக்கறிஞர்கள் பி.டி.பெருமாள், சிவகுமார் ஆகியோர் ஆஜரானார்கள்.

ad

ad