புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

19 நவ., 2012


விடுதலைப் புலிகளின் செயற்பாடு ஐரோப்பாவுக்கு அச்சுறுத்தல்: இலங்கை பாதுகாப்பு அமைச்சு
ஐரோப்பியாவில் தமிழீழு விடுதலைப் புலிகளின் செயற்பாடுகள் இலங்கைக்கும் ஏனைய நாடுகளுக்கும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளதாக இலங்கையின் பாதுகாப்பு அமைச்சு குறிப்பிட்டுள்ளது

இந்தநிலையில் பரிதி என்ற பிரான்ஸ் நாட்டில் வசித்து வந்த விடுதலைப் புலிகளின் இணைப்பாளர் கொல்லப்பட்டமைக்கு விடுதலைப் புலிகளின் மத்தியில் உள்ள முரண்பாடுகளே காரணம் என்றும் பாதுகாப்பு அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
குறிப்பாக மாவீரர் தின நிகழ்வு தொடர்பான பிரச்சினையே இந்த கொலைக்கான காரணம் என்றும் இலங்கையின் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
விடுதலைப் புலிகளின் ருத்திரகுமாரன் அணியும், நெடியன் அணியும் இணைந்து மாவீரர் நிகழ்வை பாரிஸில் நடத்த எடுக்கப்பட்ட முயற்சி தோல்வியடைந்தமையே பரிதியின் கொலைக்கான காரணம் என்று இலங்கையின் பாதுகாப்பு அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
பரிதி, 1980 ஆண்டில் விடுதலைப்புலிகள் இயக்கத்தில் இணைந்தார். அவர் மன்னார் மாவட்ட தளபதி விக்டரின் தலைமையில் பயிற்சிகளை பெற்றார்.
இதன் பின்னர் யாழ்ப்பாண பிரதி தளபதியாக நியமிக்கப்பட்டார். இந்தநிலையில் இந்திய இராணுவத்துடன் இடம்பெற்ற மோதல் ஒன்றில் காயமடைந்த அவர் சிகிச்சைக்காக இந்தியாவுக்கு சென்று அதன்பின்னர் பிரான்ஸுக்கு அனுப்பப்பட்டார்.

ad

ad