புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

7 நவ., 2012


பிரதம நீதியரசருக்கு எதிராக குற்றப் பிரேரணையில் கையெழுத்திட்ட தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள
இலங்கையின் உயர்நீதிமன்ற தலைமை நீதியரசர் ஷிராணி பண்டாரநாயக்கவிற்கு எதிராக பல ஊழல் குற்றச்சாட்டுக்களைச் சுமத்தி ஆளும் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள், குற்றப் பிரேரணையை நாடாளுமன்றில் சமர்ப்பித்துள்ளனர்.
அக்குற்றப்பிரேரணையில் ஆளும் கட்சியைச் சேர்ந்த 117 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கைச்சாத்திட்டனர். குற்றப்பிரேரணையில் கையெழுத்திட்ட தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் விபரம் தற்போது வெளியாகியுள்ளன.
ஈழ மக்கள் ஜனநாயக கட்சியைச் சேர்ந்த டக்ளஸ் தேவானந்தா, சில்வெஸ்திரி அலன்றின் , மலையக மக்கள் முன்னணியைச் சேர்ந்த வீ.எஸ்.ராதாகிருஷ்ணன், இலங்கை தொழிலாளர் காங்கிரஸைச் சேர்ந்த முத்து சிவலிங்கம், சட்டத்தரணி பெருமாள் ராஜதுரை, ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியைச் சேர்ந்த விநாயகமூர்த்தி முரளிதரன், ஜனநாயக மக்கள் காங்கிரஸைச் சேர்ந்த பிரபா கணேசன், மற்றும் தொழிலாளர் தேசிய சங்கத்தினைச் சேர்ந்த பழனி திகாம்பரம் ஆகியோரும்,
தமிழ் பேசும் முஸ்லிம் பிரதிநிதிகள்:
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸைச் சேர்ந்த பஸீர் சேகுதாவுத், ஹரிஸ், ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பைச் சேர்ந்த எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா, அப்துல் காதர், ஏ.எச்.எம்.அஸ்வர் மற்றும் தேசிய காங்கிரஸைச் சேர்ந்த ஏ.எல்.எம்.அதாவுல்லா ஆகியொரும் கையெழுத்திட்டுள்ளனர்.
இதேவேளை, பிரதம நீதிபதி ஷிரானி பண்டாரநாயக மீது அரசாங்கம் கொண்டுவந்துள்ள பதவி நீக்க கண்டன தீர்மானத்தில் தெரிவிக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளின் விவரங்களை இலங்கை அரசாங்கம் தற்போது வெளியிட்டுள்ளது.
அவருக்கு எதிராக 14 குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன. தனது வருமானத்துக்கும் சொத்துகளுக்கும் அவர் முறையாக கணக்கு காட்டவில்லை என்று குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
தனது அதிகாரத்தை முறைகேடாகப் பயன்படுத்தியதன் மூலம் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி பதவிக்கு அவர் அவப்பெயரை ஏற்படுத்திவிட்டார் என்றும் குற்றஞ்சாட்டப்படுகிறது.
மேலும், சுமார் இரண்டு கோடி ரூபாயை ரொக்கப் பணமாக கொடுத்து ஒரு சொத்து வாங்கப்பட்டுள்ளது. இந்தப் பணம் எங்கிருந்து வந்தது என்று தெரிவிக்கப்பட்டிருக்கவில்லை என்பதாக ஒரு குற்றச்சாட்டு அமைந்துள்ளது.
தேசிய அபிவிருத்தி வங்கியின் கிளை ஒன்றில் ரூபாய் 3 கோடியே 40 லட்சம் மதிப்புடைய வெளிநாட்டுப் பணம் இவர் பெயரில் உள்ளது என்பது இன்னொரு குற்றச்சாட்டு. அதிகாரிகளிடம் தெரியப்படுத்தாமல் இருபது வங்கிக் கணக்குகள் இவரிடம் உள்ளன என்றும் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
ஷிரானியின் கணவர் பிரதீப் காரியவாசம் மீது ஊழல் செய்ததாகக் குற்றம்சாட்டப்பட்டு, கொழும்பில் வழக்கு ஒன்று நிலுவையில் உள்ளது என்பதையும் இந்தக் கண்டனத் தீர்மானம் குறிப்பிடுகிறது.

ad

ad