புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

5 நவ., 2012


கொள்கையை அடமானம் வைத்துவிட்டது சி.பி.எம்.! புதிய கட்சி தொடங்கியோர் குற்றச்சாட்டு!





'ஒடுக்கும் வர்கத்தின் அரசுக்கு எதிராக ஒடுக்கப்படும் வர்க்கம் போராட வேண்டும் அதை தலைமை தாங்கி முன்னெடுத்து செல்வது கம்யூனிஸ்ட் கட்சியின் 

கடமை-என்பார் கார்ல் மார்க்ஸ். ஆனால் உழைக்கும் மக்களின் பக்கம் நிற்க வேண்டிய கட்சி இன்று முதலாளிகளின் பக்கம், நிலவுடமையாளர்களின் பக்கம் நிற்கிறது...எனவே நாங்கள் பிரிந்து புது கட்சி தொடங்கி உள்ளோம்'- என சேலத்தில் ஒரு மண்டபத்தில் திரண்ட செஞ்சட்டையினர் கூறினர்.
 
சி.பி.எம் கட்சியில் இருந்து நூற்றுக்கணக்கானோர் பிரிந்து 'மார்க்சிஸ்ட் கட்சி' என்ற பெயரில் புதிய கட்சி தொடங்கியுள்ளனர். 

அதன் அமைப்பாளர் கங்காதரன் கூறிய போது,
 
 சர்வதேச அனாதைகள் ஆகிவிட்டது சி.பி.எம். கொள்கையை அடமானம் வைத்துவிட்டது. நில உடமை, ஏக போக எதிர்ப்பு இதில் எல்லாம் சமரசம்செய்து 

கொண்டாங்க... காங்கிரஸ், பா.ஜ.க இருவருமே மக்களுக்கு எதிரானவர்கள்... ஆனால் ரவுடியில் இவன் நல்ல ரவுடி, கெட்ட ரவுடி என்பது போல காங்கிரசுக்கு ஆதரவு தந்தனர். 

மாநிலத்திலும் அப்படியே மாறி மாறி திராவிட கட்சிகளுக்கு ஆதரவு என்ற பெயரில் சவாரி செய்து கொள்கையை அடமானம் வைத்துவிட்டனர். பெருவாரியாக குவிந்து இருக்கும் நிலங்களை பிடுங்கி மக்களுக்கு பிரித்து தரனும் என்பது கட்சி திட்டம் 2000ல் திருத்தி அமைக்கப்பட்ட கட்சி திட்டத்தில் நிலம் வைத்துருப்பவர்களுக்கு இழப்பீடு தந்துவிட்டு நிலங்களை பெற வேண்டும் என்கிறார்கள்.

அந்நிய மூலதன எதிர்ப்பில் சரியான திட்டமில்லை. சாதியவாததில் ஊறி போய் கிடக்கிறது கட்சி. ராம கிருஷ்ணன், சவுந்தரராஜன், ரங்கராஜன் என கோஷ்டிகளாக கட்சி பிரிஞ்சு கிடக்கு. கூடங்குளம் விவகாரத்தில் மக்கள் போராட்டங்களுக்கு எதிராக இருக்கு கட்சி. இலங்கை தமிழர் விசயத்திலும் அப்படி தான். மக்கள் போராட்டங்கள், உணர்வுக்கு முக்கியத்துவமே அளிப்பதில்லை. ஒரு ஊழல், தவறு  முதலில் தெரிய வருவது கம்யூனிஸ்ட்டுக்கு தான் ஏனெனில் மக்கள் பக்கம் நிற்பவர்கள். ஆனால் கல்குவாரி ஊழலில் இருந்து பலவை பத்திரிக்கையில் வந்தபின் தான் இவர்கள் கண்துடைப்பாக ஒரு போராட்டத்தை செய்கிறார்கள் என்றால் எல்லோரும் கார்பரேட்வாதிகளாய் மாறிவிட்டனர் என்று தானே அர்த்தம். நாலு வருடம் முன் 1 லட்சத்தி 12 ஆயிரம் உறுப்பினர் மதுரை மாநாடு வந்தனர். 2012 ஏப்ரலில் நடந்த நாகை மாநாட்டில் 90000 உறுப்பினர்கள் தான் வந்ததாக கட்சியே சொல்கிறது. அங்கே வந்தவர்களில் 36000 பேர்கள் தான் பழைய ஆட்கள். ஆக அம்பத்தியாராயிரம் பேர்கள் கட்சியை விட்டு சென்றுவிட்டனர் என்று தானே அர்த்தம்.
 
நாடு முழுக்க இதுதான் நிலை. படுகுழிக்கு சென்றுவிட்டது கட்சி. முதலாளித்துவ கட்சியாக மாறிவிட்டது. எனவே புதிய 'மார்க்சிஸ்ட் கட்சி'யாக திரண்டுள்ளோம்.

'ஒரு மனிதன் ஒரு வாக்கு என்று இல்லாமல் ஒரு மனிதன் ஒரு மதிப்பு 'என்ற உண்மையான ஜனநாயகத்தின் படி தேர்தல் பாதையில் புதிய சமுகம் அமைத்திட திரண்டுள்ளோம் ஓரிரு மாதத்தில் பெரிய மாநாடு நடத்த உள்ளோம்... 'என்றார்
 
வந்திருந்த அனைவருக்கும் சிக்கன் பிரியாணி வழங்கப்பட்டது.

படங்கள்,செய்தி:இளங்கோவன் 

ad

ad