புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

15 நவ., 2012


இலங்கை தமிழர் பிரச்சனை குறித்து அனைத்துக் கட்சி கூட்டம்: தமிழக அரசுக்கு ஜி.கே.மணி வலியுறுத்தல்
 

 
 
 

 
 

 



 
இலங்கையில் நடைபெற்ற இன அழிப்பின் மீது ஓர் சர்வதேச சுயாதீன விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று வலியுறுத்தும் மாநாடு கடந்த 7, 8, 9 ஆகிய தேதிகளில் லண்டனில் நடந்தது. இதில் தமிழகத்திலிருந்து பல்வேறுகட்சிகளைச் சேர்ந்தவர்களும், பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்தவர்களும் கலந்து கொண்டனர். பசுமைத் தாயகம் சார்பாக கலந்து கொண்ட பாமக தலைவர் ஜி.கே.மணி இன்று (15.11.2012) காலை சென்னை திரும்பினார். அவரை முன்னாள் மத்திய அமைச்சர் அன்புமணி ராமதாஸ் மற்றும் முன்னாள் மத்திய இணை அமைச்சர் ஏ.கே.மூர்த்தி ஆகியோர் வரவேற்றனர். 
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஜி.கே.மணி, 
ஐ.நா. சபையில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்தவர்கள், பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்தவர்களெல்லாம் இலங்கை பிரச்சனையில் இந்தியாவின் நிலைப்பாடு என்ன என்று பல நாடுகள் எதிர்பார்க்கின்றன. எனவே இந்தியாவைச் சேர்ந்த இந்தியராக இருக்கின்ற நீங்கள் தமிழ்நாட்டின் மூலமாக இந்திய அரசை வற்புறுத்துவீர்களா என்ற ஒரு கேள்வி ஐ.நா. சபையில் எழுப்பப்பட்டது.
அடுத்து லண்டனில் நடைபெற்ற அந்நாட்டின் நாடாளுமன்ற கூட்டத்திலேயும், உலகத் தமிழர் மாநாட்டிலேயும் உலகெங்கும் வாழக்கூடிய தமிழர்களும் இங்கிலாந்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் கேட்டது, தமிழ்நாட்டில் அனைத்துக் கட்சிகளும் தனித்தனியாக குரல் கொடுக்கிறீர்கள். போராடுகிறீர்கள். பொதுமக்கள் உணர்வு பூர்வமாக இருக்கிறார்கள். ஆகவே, அந்த உணர்வுகளை ஒன்று திரட்டி, தமிழ்நாட்டில் அனைத்துக் கட்சி கூட்டம் கூட்டப்பட்டு இந்திய அரசை ஒன்றாக வலியுறுத்துவீர்களா? ஒரே குரலில் ஒன்றாக வலியுறுத்துவீர்களா? என்பதுதான் அவர்கள் கேள்வி. இதற்கு உங்கள் கட்சி மூலமாக முதல் அமைச்சரை சந்தித்து அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்ட சொல்லுங்கள். உலகெங்கும் வாழுகின்ற தமிழர்கள் நாங்கள் எதிர்பார்க்கிறோம் என்றும் சொல்லுங்கள். பின்னர் டெல்லியில் பிரதமரிடமும், சோனியாவிடமும் வ-யுறுத்த வேண்டும். இதனை தமிழ்நாடு முதல் அமைச்சர்தான் செய்ய வேண்டும் என்றனர். ஆகவேதான் பாமக சார்பில் முதல் அமைச்சருக்கும், தமிழக அரசுக்கும் இந்த வேண்டுகோளை முன்வைக்கிறோம். 
அனைத்துக் கட்சி கூட்டத்தில் நிறைவேற்றப்பட வேண்டிய தீர்மானங்கள், இலங்கையில் ஒரு லட்சம் தமிழர்கள் சுட்டுக்கொல்லப்பட்டிருக்கிறார்கள். 50 ஆயிரம் பேர் காணாமல் போயிருக்கிறார்கள். முள்ளிவாய்க்காலில் ஒரே நாளில் 40 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் படுகொலை செய்யப்பட்டிருக்கிறார்கள். வெள்ளை கொடி ஏந்தி சமாதானத்திற்கு சென்றவர்களை ஒட்டுமொத்தமாக அழித்திருக்கிறார்கள். செஞ்சிலுவை சங்கம் செயல்பட அனுமதியில்லை. அப்போது அனுமதி மறுக்கப்பட்டது. ஐ.நா.சபையை சேர்ந்தவர்களும், மற்ற நாடுகளைச் சேர்ந்த ஊடகங்களைச் சேர்ந்தவர்களும் இலங்கை சென்று உண்மை நிலையை கண்டறிய முடியவில்லை. 
தமிழர்கள் நிலப் பகுதிகளில் ராணுவ குடியேற்றங்களும், சிங்களவர்கள் குடியேற்றங்களும் நடந்து கொண்டிருக்கிறது. அது தடுத்து நிறுத்தப்பட வேண்டும். முகாம்களில் இன்னும் சித்ரவதைகள் நடந்துகொண்டுதான் இருக்கிறது. ஆகவே இதையெல்லாம் தடுத்துநிறுத்துவதற்கு, அங்கே நடந்துகொண்டிருப்பது ஒரு இனபடுகொலை, மனித உரிமை மீறல் நடந்திருக்கிறது. ஆகவே சுதந்திரமான சர்வதேச போர்க்குற்ற நீதி விசாரணை வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டு இந்திய அரசை வலியுறுத்த வேண்டும். இவ்வாறு ஜி.கே.மணி கூறினார்.

படங்கள்: அசோக்

ad

ad