புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

30 நவ., 2012


தண்ணீர் தர கர்நாடகம் மறுப்பு: தமிழக அரசியல் தலைவர்கள்-விவசாய அமைப்புகள் கண்டனம்


ஏற்கனவே குறுவை சாகுபடியை இழந்த தமிழக விவசாயிகள், கருகி வரும் சம்பா பயிர்களையாவது காப்பாற்றலாம் என்ற நம்பிக்கையில் இருந்தனர். ஆனால் கர்நாடகம் கைவிரித்துவிட்டதால் விவசாயிகள் கடும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
காவிரி நீர் விவகாரம் தொடர்பாக தமிழக முதல்வர் ஜெயலலிதா, கர்நாடக முதல்வர் ஜெகதீஷ் ஷெட்டரை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது கர்நாடகத்தில் குறைவான அளவே தண்ணீர் இருப்பதால் தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விட முடியாது என்று கைவிரித்துவிட்டது.
கர்நாடக அரசின் இந்த அதிரடி முடிவுக்கு தமிழக அரசியல் கட்சிகளும் விவசாய அமைப்புகளும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கும் இந்நேரத்தில், முதல்வர் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வி அடைந்திருப்பது வேதனை அளிக்கிறது. வறட்சி காலங்களில் தண்ணீரை பகிர்ந்து கொள்ள வேண்டும் என்கிற மனிதாபிமான அடிப்படையில் கர்நாடக அரசு தண்ணீர் திறந்திருக்க வேண்டும்.
இந்த சூழ்நிலையில் தமிழக அரசின் நிலைப்பாட்டுக்கு தமிழக பாரதீய ஜனதா ஆதரவாக இருக்கும் என்று அக்கட்சியின் மூத்த தலைவர் இல.கணேசன் தெரிவித்தார்.
மேலும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் ராமகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்ட் செயலாளர் தா.பாண்டியன், பழ.நெடுமாறன் உள்ளிட்ட பல்வேறு தலைவர்களும் கர்நாடக அரசுக்கு கண்டனம் தெரிவித்துள்ளனர். இந்த விஷயத்தில் உச்சநீதிமன்றம் உறுதியான தீர்ப்பை வழங்கியிருக்க வேண்டும் என்று பழ.நெடுமாறன் குறிப்பிட்டார்.

ad

ad