புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

15 நவ., 2012


ஐ.நா. பொறுப்பு தவறியது: குற்றத்தை ஏற்றுக் கொண்டார் பான் கீ மூன்
இலங்கையில் இடம்பெற்ற இறுதி யுத்தத்தின் போது ஐக்கிய நாடுகள் சபை தமது பொறுப்பினை சரிவர நிறைவேற்றவில்லை என்ற குற்றச்சாட்டை ஐக்கிய நாடுகள் சபையின் பொது செயலாளர் பான் கீ மூன் ஏற்றுக் கொண்டுள்ளார்.
பிரித்தானியாவின் சார்ள்ஸ் பெற்றியினால் இலங்கையின் இறுதி யுத்தத்தின் போது ஐக்கிய நாடுகள் சபை மேற்கொண்ட செயற்பாடுகள் குறித்து தயாரிக்கப்பட்ட அறிக்கை நேற்று பான் கீ மூனிடம் கையளிக்கப்பட்டது.
இந்த நிலையில் இது தொடர்பில் பான் கீ மூன் வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில், தமது உள்ள குழு ஆராய்ந்து வெளியிட்ட அறிக்கையில் முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டினை ஏற்றுக் கொள்வதாக தெரிவித்துள்ளார்.
இறுதி யுத்த காலப்பகுதியில் இலங்கையில் ஐக்கிய நாடுகள் சபை தமது பொறுப்புகளை சரிவர செயற்படுத்தவில்லை. இதனை ஐக்கிய நாடுகள் சபை ஒரு பாடமாக கொள்ள வேண்டும்.
எதிர்வரும் காலங்களில் சர்வதேச மக்களிடம் ஐக்கிய நாடுகள் சபை மீதான நம்பிக்கை அற்றுப் போகாதிருக்க, போதிய அளவு ஐக்கிய நாடுகள் சபையின் செயற்பாட்டாளர்கள் பொறுப்புடன் செயற்பட வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

ad

ad