புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

23 நவ., 2012

சர்மிளாவின் பாலர் பாடசாலைக்கு தீ வைக்க முயற்சி
இலங்கையில் பாலியல் தொழிலை சட்டப்பூர்வமாக்கவேண்டும் என்கிற யோசனை தொடர்பில் தமது கருத்தை தெரிவித்த ஏறாவூரைச் சேர்ந்த முஸ்லிம் சமூக ஆய்வாளர் ஷர்மிளா சயீத்தின் நிர்வாகத்திற்குரிய பகல் நேர பாலர் பராமரிப்பு நிலையத்திற்கு வியாழக்கிழமை அதிகாலை தீ வைக்க முயற்சிகள்
மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அவரது சகோதரியான சயீத் அஹமது பர்ஸானா பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.
 

பாலர் பராமரிப்பு நிலையம் மூடப்பட்டிருந்த வேளை கதவு துவாரம் ஊடாக உள்ளே பெட்ரோல் ஊற்றப்பட்டு தீ வைப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டதாகக் கூறும் அவர், இரும்புக் கதவு என்பதால் தீ உள்ளே பரவவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.
தனக்கும் பாலர்களுக்கும் கட்டிடத்திற்கும் பாதுகாப்பு வழங்குமாறு ஏறாவூர் காவல்துறையிடம் தான் செய்த முறைப்பாட்டையடுத்து பாதுகாப்பு உத்தரவாதம் வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் பிபிசி.க்கு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக ஏறாவூர் காவல்துறையினரிடம் தொடர்பு கொண்ட போது முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், பாதிப்புகள் இல்லை என்றும் இதுகுறித்த மேலதிக விசாரனைகள் நடைபெற்று வருவதாகவும் பதிலளிக்கப்பட்டது.

இதற்கிடையே, புதன் கிழமை ஏறாவூர் பள்ளிவாசல்கள் சம்மேளனக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானத்தின் படி 5 பேர் கொண்ட குழு, சமூக ஆய்வாளர் ஷர்மிளா சயீத்தின் பெற்றோரை வியாழக்கிழமை இரவு சந்தித்து ஷர்மிளா சயீத்தினால் தெரிவிக்கப்பட்ட கருத்து தொடர்பாக உரையாடியது.

இந்த சந்திப்பு தொடர்பாக சம்மேளனத்தைச் சேர்ந்த மௌலவி எம்.எல்அப்துல் வாஜித் சம்மேளன பிரதிநிதிகளுக்கு அவருடன் தொடர்பை ஏற்படுத்தித் தருமாறு வேண்டுகோள் முன் வைத்ததாக பிபிசி.க்கு தெரிவித்துள்ளார்.

தனது மகளால் தெரிவிக்கப்பட்ட கருத்துக்கள், இஸ்லாததிற்கு எதிரானது என்று அவரது தந்தை ஏற்றுக்கொண்டதாகவும், அதற்காக தனது வருத்தத்தை தெரிவித்ததோடு தங்களிடம் மன்னிப்பு கேட்டதாகவும் மௌலவி ஏ.எல்.அப்துல் வாஜித் குறிப்பிட்டுள்ளார்.

தங்களால் கூட தம் மகளுடன் தொடர்பு கொள்ள முடியாத நிலை இருப்பதாக அவரது தந்தை இந்த சந்திப்பில் தங்களிடம் சுட்டிக்காட்டியதாக தெரிவித்த அவர், ஒரிரு நாட்களில் தாம் கொழும்புக்கு நேரில் சென்று தமது மகளின் தொடர்பை பெற்று பள்ளிவாசல்கள் சம்மேளனததின் எதிர்பார்ப்புகளுக்கு அமைய மன்னிப்பு கோர வைப்பது தொடர்பான உறுதிமொழியை ஷர்மிளாவின் தந்தை தங்களுக்கு வழங்கியதாகவும் அப்துல் வாஜித் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

ad

ad