புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

19 நவ., 2012


தமிழர்கள் மீதான ஒடுக்கு முறையை சுட்டிக்காட்டிய பால் தாக்கரே!
இந்திய சிவசேனா கட்சியின் அகில இந்தியத் தலைவர் பால் தாக்கரேயின் இறப்பு மக்களால் ஜீரனிக்க முடியாத அதிர்ச்சி இதனை ஈடு செய்யும் அளவுக்கு யாரிடமும் இருக்குமா என்பது சிந்தனைக்கு அப்பாற்பட்டது என பாராளுமன்ற உறுப்பினர் சீனித்தம்பி யோகேஸ்வரன் விடுத்துள்ள அனுதாபச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்
தனது அனுதாபச் செய்தியில் அவர் மேலும் தெரிவிக்கையில்
சனிக்கிழமை இயற்கை மரணம் அடைந்த இந்திய சிவசேனா கட்சியின் அகில இந்தியத் தலைவர் பால் தாக்கரேயின் இழப்பு முழு இந்துக்களுக்கும் ஈடு செய்ய முடியாத இழப்பு முதிர்ந்த வயதில் இறந்தாலும் அவரது செயற்பாட்டின் வீரியம் இழமையிலும் இழமையாக இருந்தது.
வாழ்ந்த நாட்களில் ஒடுக்கப்பட்டவர்களுக்காக ஓங்கி ஒலித்த குரல் இன்று மௌனமாகி விட்டது என்றால் யாராலும் ஏற்க முடியாத ஒரு விடயம் இன்று உலகில் இந்துக்களுக்கு அநீதி இழைக்கப்படுகிறது என்றால் உடன் அவற்றை கண்டிக்கும் திரானி உடையவர் என்றால் மிகையாகாது.
குறிப்பாக தமிழர் தாயகத்தில் இடம் பெற்ற தமிழர்கள் மீதான ஒடுக்கு முறையையும் சுட்டிக்காட்டத் தவராததுடன் இந்து ஆலயங்கள் மீது இலங்கை அரசின் அட்டூளியங்களையும் எடுத்தியம்பியவர்.
ஒரு மனிதன் வாழும் போதும் இறந்த பின்பும் மக்கள் மனங்களில் இடம் பிடிப்பது என்பது எளிதான விடயமல்ல. ஆனால் வாழும் போதும் இறந்த பின்பும் பல இலட்சம் மக்கள் நேசித்ததை மும்பை நகரக் காட்சிகள் நன்கு எடுத்தியம்புகின்றன
இவரின் மறைவால் இந்திய அரசியலில் பாரிய வெற்றிடம் ஏற்பட்டிருப்பதை எதிர்வரும் காலம் உணர்த்தும் அந்த அளவுக்கு தனக்கு என தனியான திறமைகளை அரசியலில் தன்னகத்தே கொண்டிருந்த புலமையாளனை பாரத தேசம் இன்று இழந்துள்ளது .
என்பதுடன் இவரது இழப்பால் வேதனையில் உள்ள குடும்பத்தார், கட்சி தொண்டர்கள், இந்திய மக்கள் அனைவருக்கும் எனது இரங்கலை தெரிவிப்பதுடன், இவரது ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிராத்திப்பதாகவும் அவ் இரங்கற் செய்திக் குறிப்பில் சுட்டிக் காட்டியுள்ளார்.

ad

ad