புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

5 நவ., 2012

பாரிஸ் மாஸ்டர்ஸ் டென்னிஸ் பட்டத்தை கைப்பற்றியது பூபதி-போபண்ணா ஜோடி
பிரான்ஸ் தலைநகர் பாரிசில் 'பாரிஸ் மாஸ்டர்ஸ் டென்னிஸ்' போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இதில் இன்று நடைபெற்ற ஆண்கள் இரட்டையர் டென்னிஸ் இறுதிப் போட்டியில் 5-ம் நிலை ஜோடியான இந்தியாவின் மகேஷ்
பூபதி-ரோகன் போபண்ணா ஜோடி, 7-ம் நிலை ஜோடியான பாகிஸ்தானின் ஐசாம்-உல்-ஹக் குரேஷி, நெதர்லாந்தின் ஜீன் ஜூலியன் ரோஜர் ஜோடியை எதிர்கொண்டது.

1 மணிநேரம் 24 நிமிடங்கள் கடுமையாக நடைபெற்ற இந்த போட்டியில் மகேஷ் பூபதி-ரோகன் போபண்ணா ஜோடி 7-6 (6), 6-3 என்ற நேர் செட்டுகளில் பாகிஸ்தானின் ஐசாம்-உல்-ஹக் குரேஷி, நெதர்லாந்தின் ஜீன் ஜூலியன் ரோஜர் ஜோடியை வெற்றிக்கொண்டது.

இந்த சீசனில் நான்கு இறுதிப்போட்டிகளுக்கு இந்த ஜோடி தேர்வானது குறிப்பிடத்தக்கது. முன்னதாக துபாய் ஓபன் டென்னிஸ் பட்டத்தை வென்ற பூபதி-போபண்ணா ஜோடி, தற்போது இரண்டாவதாக பாரிஸ் மாஸ்டர்ஸ் பட்டத்தையும் வென்றுள்ளது.

ஏற்கனவே, இந்த வருடம் நடைபெற்ற ஏ.டி.பி., சின்சினாட்டி ஓபன் மற்றும் ஷாங்காய் ரோலக்ஸ் மாஸ்டர்ஸ் தொடர்களில் பூபதி-போபண்ணா இறுதிப்போட்டி வரை முன்னேறி இருந்தது.

ad

ad