அன்புக்கும் மதிப்புக்கும் உரிய எம் தமிழ் மக்களே. நாம் எம் தாயக விடுதலைப்போராட்டத்தில்இன்னுயிரை அர்ப்பணித்த எம் மாவீரர்களுக்கு மதிப்பளிக்கும் வாரம் மாவீரர் வாரம். இந்த வாரத்தில் எவ்வகையான கழியாட்ட நிகழ்வுகளையும்அனுமதிக்க முடியாது
அது மக்கள் ஆகிய எம் கடமை. இந்த வாரத்தில் இவ்வாறான நிகழ்வுகளை நடத்துபவர்களுக்கு நீங்கள் என்னசெய்யப்போகின்றீர்கள்? எம் மாவீரர்களை நினைவுகூரும்  வாரத்தை அமைதியான முறையில் எந்தவொரு கழியாட்ட நிகழ்வுகளையும் அனுமதிக்காமல் பார்த்துக்கொள்வது எம் கடமை.

உறவுகளே தயவுசெய்து இந்த விடையத்தை கவனத்தில் எடுங்கள்.

இவ்வாறான கழியாட்ட நிகழ்வு ஓன்று சிட்னியில் நடைபெற உள்ளது அதன் விபரம் கீழ் இணைத்துழோம்.


மாவீரர் வாரத்தில் வைத்தியர்களின் கழியாட்டம் மாவீரர் வாரத்தை உணர்வு பூர்வமாக கடைப்பிடிக்க வேண்டிய காலப்பகுதியான 25.11.2012 அன்று  சிட்னி வாழ் ஒரு சில தமிழ் மருத்துவர்களால் கலை நிகழ்ச்சி ஒன்று நடாத்தப்படவுள்ளது.

இந்த நிகழ்வு நடைபெறவுள்ளதால் சிட்னிவாழ்  தமிழ் மக்கள் அனைவரும் அதிருப்தியில் உள்ளார்கள்  என அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் கூறுகின்றன.

மேலும் மாவீரர் வாரத்தில் இவ்வாறான ஒரு கலை நிகழ்வு நடாத்துவது மாவீரர்களையும் அவர்களின்  தியாகத்தையும் அவமதிக்கும் ஒரு நிகழ்வாகும். ஆகவே இந்த நிகழ்வை வேறு ஒரு திகதிக்கு  மாற்றம் செய்யுமாறு ஏற்பாட்டாளர்களிடம் பணிவுடன் கேட்கப்பட்டதாகவும் அதற்கு ஏற்பாட்டாளர்கள்  மறுத்துவிட்டார்கள்.மறுத்தது மட்டுமல்லாது சிட்னியில் இயங்கி வரும் தமிழ் வானொலி ஒன்றில்  நவம்பர் 25ம் திகதி நடைபெற உள்ள நிகழ்வு தொடர்பாக எவரும் விமர்சிக்க கூடாது என்றும்  பலதும் அறிந்த புத்திஜீவிகள் என சொல்லப்படும் அல்லது மதிக்கப்படும் இவர்கள் தாயக விடுதலைப்போரில்  தங்கள் இன்னுயிரை அர்ப்பணித்த மாவீரர்களை நினைவுகூறும் தேசிய மாவீரர் வாரத்தில் தமது  கலை நிகழ்வை நடாத்துவது எமக்கு மிகவும் கவலையை  தருகின்றது.

இதற்கு மக்களாகிய நீங்கள் சொல்லும் பதில் என்ன.
http://eeladhesam.com/images/stories/new/news/01.04.2011news/v-sydneynews%20(1).jpg