புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

30 நவ., 2012


திமுகவை தமிழக அரசு மதிக்காததால் சட்டப்பேரவை வைர விழாவை புறக்கணிப்போம் : கலைஞர்

தமிழக சட்டப்பேரவை வைரவிழா நாளை நடைபெறுகிறது. இதில் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி கலந்துகொள்கிறார். இந்த வைரவிழா ஏற்பாடுகள் குறித்து விமர்சனம் செய்துள்ள தி.மு.க. தலைவர் கலைஞர், அந்த வை

ரவிழா கொண்டாட்டத்தில் தி.மு.க. பங்கேற்காது என்றும் அறிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், ‘’தி.மு.க.வை தமிழக அரசு மதிக்காததால் சட்டப்பேரவை வைர விழாவை புறக்கணிப்போம். வைரவிழாவில் பங்கேற்க வரும் குடியரசு தலைவர் நாளை சந்திப்பதாக கூறியிருக்கிறார்’ என்றார்.

அவர் மேலும்,   ‘‘காவிரி விவகாரம் தொடர்பாக தமிழக அரசு அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்டி ஆலோசனை நடத்தியிருக்க வேண்டும். ஆனால் அக்கூட்டத்தை தமிழக அரசு கூட்டாதது வருத்தம் அளிக்கிறது. கர்நாடகத்தில் உள்ள நிலைமையை புரிந்துகொண்டு காவிரி நீரை தமிழகம் கேட்க வேண்டும்’’ என்றார்.

ad

ad