புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

23 நவ., 2012

எதிரிகளின் ஏவுகணைகளை வழிமறித்து அழிக்கும் சூப்பர்சானிக் ஏவுகணை சோதனை வெற்றி
நீண்ட தூரம் சென்று இலக்குகளை தாக்கும் ஏவுகணைகளை தயாரிப்பதில் இந்தியா முன்னேற்றம் கண்டுள்ளது. அந்த வகையில் இந்திய பாதுகாப்பு படையில் மேலும் ஒரு மைல் கல்லாக, எதிரிகளின் ஏவுகணைகளை இடைமறித்து தாக்கி அழிக்கும் வல்லமை பெற்ற சூப்பர்சானிக் ஏவுகணையை இன்று வெற்றிகரமாக சோதனை செய்தது.
 
ஒடிசா மாநிலம் பலசோர் அருகே உள்ள கடற்கரையில் இந்த சோதனை நடந்தது.  இன்று பகல் 12.52 மணியளவில் சண்டிபூர் கடற்பகுதியில் இருந்து ஒரு ஏவுகணை ஏவப்பட்டது. பின்னர் 4 நிமிடம் கழித்து, வீலர் தீவில் இருந்து இடைமறித்து தாக்கும் ஏவுகணை ஏவப்பட்டது.
 
பின்னர் கண்காணிப்பு ரேடார்கள் தரும் சிக்னல்கள் உதவியுடன், இந்த ஏவுகணை குறித்த நேரத்தில் சண்டிபூரில் இருந்து வந்த ஏவுகணையை நடுவானில் இடைமறித்து தாக்கி அழித்தது.
 
கடைசியாக பிப்ரவரி 10-ம் தேதி இதே இடத்தில் சூப்பர்சானிக் ஏவுகணை வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டது. இதுவரை மொத்தம் 8 முறை இந்த ஏவுகணை சோதனை செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

ad

ad