புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

6 நவ., 2012


கடனிலிருந்து மீள்வதற்காகவே நண்பனை படுகொலை செய்தேன்! நகை வர்த்தகர் கொலை குறித்து சந்தேகநபர் வாக்குமூலம்
மனைவியின் நகைகள் அடகு வைக்கப்பட்டிருந்தன. பெருந்தொகையான கடன் இருந்தது. கடன் தொல்லையிலிருந்தும் பல பிரச்சினைகளிலிருந்தும் மீள்வதற்காகவே நண்பனான சின்னத்துரை இந்திரேஷ்வரன் என்பவரை கழுத்து நெரித்து படுகொலை செய்தேன்.
இவ்வாறு இக்கொலையுடன் தொடர்புடைய சந்தேக நபர் பொலிஸில் ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளார். 
கடந்தவாரம் கொழும்பு புற்க்கோட்டை பகுதியில் பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதனின் மைத்துனரான 57 வயதுடைய இந்திரேஸ்வரன் காணாமல் போயிருந்தார்.
அவர் கடந்த 31ம் திகதி நானுஓயா பகுதியில் சடலமாக மீட்கப்பட்டதுடன், கடந்த 3ம் திகதி சந்தேகத்தில் பேரில் ஒருவர் புறக்கோட்டைப் பொலிஸாரால் கைது செய்யப்பட்டார்.
இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேகநபரே மேற்கண்டவாறு வாக்குமூலம் அளித்ததாக புறக்கோட்டை பொலிஸ்நிலையப் பொறுப்பதிகாரி பிரியந்த திக்கோவிட்ட தெரிவித்தார்.
இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது:
கொலை செய்யப்பட்ட நபரும் சந்தேக நபரும் நெருங்கிய நண்பர்கள். கொலையுண்ட நபர் அடகு வைத்து மீட்கமுடியாமல் இருக்கும் நகைகளை மீட்டெடுத்து அதனை விற்பனை செய்து வருவதை தொழிலாகக் கொண்டிருந்தார். சம்பவ நாளான கடந்த 30ம் திகதி சந்தேக நபர் ஒரு தொகுதி நகை இருப்பதாகவும் அதனை மீட்பதற்கு வருமாறும் அவருக்கு அழைப்பு விடுத்திருந்தார்.
நண்பனின் அழைப்பை ஏற்று 33 லட்சம் ரூபா பணத்துடன் புற்க்கோட்டை வந்த இந்திரேஸ்வரனை அவருடைய நண்பர் தனது காரில் கொட்டிகாவத்தை பகுதிக்கு அழைத்துச் சென்று அங்கு அவருடைய கழுத்தை நெரித்துக் கொலை செய்துள்ளார். இவ்வாறு கொலை செய்த பின்னர் சடலத்தை காரில் கொண்டுசென்று நானுஓயா பகுதியில் வீசிவிட்டு வந்துள்ளார்.
கொலைசெய்யப்பட்ட நபரின் கையடக்கத் தொலைபேசியில் பதிவாகியிருந்த தொலைபேசி இலக்கத்தினூடாக பொலிஸாருக்கு கிடைத்த மேலும் தகவல்களின் அடிப்படையில் குறித்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டார்.
சந்தேகநபரிடமிருந்து மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் பின்னர் அவரிடமிருந்து 23 லட்சம் ரூபா பணத்தினையும் கொலை செய்யப்பட்டவரிடமிருந்து எடுக்கப்பட்ட நான்கு மோதிரங்களையும் பொலிஸார் மீட்டுள்ளனர்.
சந்தேகநபர் 33 லட்சம் ரூபா பணத்தில் 10 லட்சம் ரூபாவை சிலருக்கு கொடுக்கவேண்டிய கடனை அடைத்துள்ளதுடன், அடகு வைத்திருக்கும் மனைவியின் நகைகளையும் மீட்டுள்ளதாக சந்தேகநபர் வாக்குமூலம் அளித்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

ad

ad