புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

23 நவ., 2012


நாட்டின் நல்லிணக்கத்திற்கு ஒரு சாபக்கேடாக இருப்பவர் அஸ்வர்;சாடுகிறார் சரவணபவன் எம்.பி
 நாட்டின் நல்லிணக்கத்திற்கு ஒரு சாபக்கேடாக இருப்பவர் ஆளும் கட்சி உறுப்பினரான அஸ்வர். அவர் எங்களுக்கு தொல்லை கொடுப்பதற்காகவே இந்த சபைக்கு வருகின்றார் என சாடிய யாழ் மாவட்ட நாடளுமன்ற உறுப்பினர் சரவணபவன்,தைரியம் இருந்தால் அஸ்வரும் ஒரு பத்திரிகை ஆரம்பிக் கட்டும்
பார்க்கலாம் என்றும்  சவால் விடுத்தார். நேற்று நாடாளுமன்றத்தில் அஸ்வருக்கும்  சரவணபவனுக்கு மிடையில் சூடான வாதப் பிரதிவாதங்கள் இடம்பெற்றன.
 பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுகைத் தொழில் அபிவிருத்தி அமைச்சுக்கான நிதி ஒதுக்கீடுகள் தொடர்பான குழு நிலை விவாதத்தின் போதே இப்படியான தொரு  வாதப்பிரதிவாதம் இடம் பெற்றது.
நாடாளுமன்ற உறுப்பினர் சரவணபவன் வடமாகாணத்தில் அழிக்கப்பட்டுள்ள பாரிய தொழிற்சாலைகள் மீண்டும் திறக்கப்பட வேண்டும். வேலைத் திட்டங்கள் பெயரளவில் மட்டும் இல்லாமல் செயல்படுத்தப்பட வேண்டும். கடந்த காலங்களில் கூறப்பட்டவையும் நடைமுறைப்படுத்தப்படவில்லை என்று குறைகளை சுட்டிக்காட்டினார். 
வாக்காலத்து வாங்கிய அஸ்வர் வாங்கிக் கட்டினார் உறுப்பினர் சரவணபவன் சுட்டிக் காட்டிய குறைபாடுகள் தொடர்பாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இடைக்கிடை பதிலளித்துக் கொண்டே இருந்தார்.
இந்த சந்தர்ப்பத்தில் ஆளும் கட்சி உறுப்பினரான ஏ.எச்.எம். அஸ்வரும் மூக்கை நுழைத்து வக்காலத்து வாங்கினார். ஐயா! இந்த மனிதர் இந்த சபையில் ஒரு தொல்லையாக இருக்கின்றார். நாங்கள் வட பகுதி அபிவிருத்தி தொடர்பாகப் பேசுகின்றோம்.  இவருக்கு என்ன தெரியும் இடையூறு செய்யாமல் இருக்க சொல்லுங்கள் என்றார் சரவணபவன்.
சபாநாயகர் அவர்களே! நாடாளுமன்ற உறுப்பினர் சரவணபவன் சபையில் தவறான விடயங்களைக் கூறுகின்றார். இவர் பொதுநோக்குடன் பேசவில்லை உதயன் பத்திரிகைக்காகவே பேசுகின்றார். நாளைக்கு அவருடைய பத்திரிகையில் செய்தி வெளிவரும் என்று கூறினார்.அஸ்வர். 
அஸ்வருடைய இந்த பேச்சு சரவணபவனுக்கு சூட்டைக் கிளப்பி விட்டது. ஐயா! இந்த மனிதர் சபையில் பெரும் தொல்லையாக இருக்கின்றார். எல்லோரும் நல்லிணக்கம் பற்றி பேசுகின்றோம். ஆனால்  அஸ்வர் நல்லிணக்கத்துக்கே சாபக்கேடாக இருக்கின்றார். அஸ்வருக்கு தைரியமிருந்தால் அவரும் ஒரு பத்திரிகையை ஆரம்பிக்கட்டும். இது அவரால் முடியுமா என சவால் விட்டார். அதற்கு மேல் பேசுவாரா அஸ்வர் கப்சிப். 
நாடாளுமன்றம் நேற்று காலை 9.30 மணிக்கு சபா நாயகர் சமல் ராஜபக்ஷ தலை மையில் கூடியது. 
வாய்மூல விடைக்கான கேள்வி நேரம் முப்பது நிமிடங்களாக குறைக்கப்பட்டுள்ளதால்  ஒழுங்குப் பத்திரத்திலும் எட்டுக் கேள்விகள் மட்டுமே உள்ளடக்கப்பட்டிருந்தன. 
எட்டுக் கேள்விகளிலும் மூன்று கேள்விகளுக்கு மட்டுமே பதிலளிக்கப்பட்டது.  ஏனையவை வழமை போல்  பதிலளிக்க கால அவகாசம் கோரப்பட்டது. சபாநாயகரின் அறிவித்தல் சபாநாயகர் சபை ஆரம்பத்தின் போது ஒரு முக்கியமான அறிவித்தலை விடுத்தார்.
சபை அமர்வுகளின் போது நாடாளுமன்ற உறுப்பினர்கள் அங்கும் இங்கும் ஓடித்திரிய முடியாது. சபை அமர்வுகளின் போது  நாடாளுமன்றத்தில் இருபக்கத்தையும் சேர்ந்த உறுப்பினர்கள் தமது ஆசனங்களில் இருப்பதில்லை.  கூட்டம் கூட்டமாக தாம் விரும்பிய இடங்களில் அமர்ந்து கொண்டு அரட்டை அடிப்பார்கள். பேசும் உறுப்பினர்களுக்கும் இடையூறு செய்வார்கள். எத்தனை நாள்களுக்கு தான் சபாநயாகரும் பொறுத்துக் கொண்டு இருப்பார். நேற்று கண்டிப்பான உத்தரவு ஒன்றைப் பிறப்பித்து விட்டார். 
இனிமேல் குழு நிலை விவாதத்தின் போது நாடாளுமன்ற உறுப்பினர்கள் தத்தமது ஆசனங்களிலேயே இருக்க வேண்டும் என உத்தியோகபூர்வமாக அறிவித்து விட்டார்.  இது சபையில் கூட்டம் கூடி கும்மாளம் அடிப்பவர்களுக்கு சற்று கவலை தரக்கூடியதாக  அமைந்து விட்டது. 
 சித்திரவதைக் கூடங்கள் 
நேற்று பாரம்பரிய கைத் தொழில்கள் மற்றும் சிறுகைத் தொழில் அமைச்சு வணிகத்துறை ஏற்றுமதி அமைச்சு, உயர்கல்வி அமைச்சு ஆகிய மூன்று அமைச்சு களுக்குமான ஒதுக்கீடுகள்  தொடர்பாக  குழுநிலையில் விவாதிக்கப் பட்டன. 
விவாதத்தை எதிர்க்கட்சிகளின் சார்பில் ஐ.தே.க உறுப்பினர் காமினி ஜெயவிக்கிரம பெரேரா ஆரம்பித்தார். 
 அவர் ஒரு கூற்றை முன் வைத்தார். அதாவது ஊடகவியலாளர் எக்னலிகொட முன்பு சித்திரவதைக்கூடம் ஒன்றிலேயே தடுத்து வைக்கப்பட்டிருந்தார். இப்போது  காணாமலேயே போய்விட்டார் என்றார்.
நேற்று சபையில் மூன்று பிரதான அமைச்சுகள்  தொடர்பான விவாதங்கள் இடம்பெற்ற போதும் சபை யில் 90 வீதமான ஆசனங்கள் காலியாகவே காணப்பட்டன. 
உரையாற்றும் உறுப்பினர்களும் தமது உரை முடித்த பின் சபையை விட்டு வெளியேறி விடுகின்றனர். சில உறுப்பினர் பேசும்போது நாற் காலிகளைப் பார்த்துப் பேசும்  பரிதாப நிலை ஏற்பட்டது. 

ad

ad